சாப்பாடுக்கு 1.50 லட்சம், லாண்டரிக்கு 1.40 லட்சம்..தயாரிப்பாளருக்கு ஷாக் தந்த ஒல்லி நடிகர் ஹீரோயின்

By

சென்னை: அந்த இளம் ஹீரோயின் கொடுத்த ஷாக் செலவுகளால் தயாரிப்பாளர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் செலவுகளை குறைக்க, தயாரிப்பாளர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். முன்பு போல படங்கள் பிசினஸ் ஆவதில்லை. வசூல் அதிக அளவில் இல்லை.

இதனால் செலவை குறைக்க முடிவு செய்துள்ளனர். ஷூட்டிங் இருந்தால் எக்ஸ்ட்ரா செலவுகள் எக்கச்சக்கமாகப் போகிறதாம்.

ஏழு பேர்

ஏழு பேர்

இதன் ஒரு பகுதியாகத்தான் டாப் ஹீரோயின்கள் தங்கள் உதவியாளர்களுக்கான 'பேட்டா'வை அவர்களே கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் விழா ஒன்றில் கோரிக்கை வைத்தார் தயாரிப்பாளர், ஒருவர். பெரிய ஹீரோயின்கள் அனைவரும் உதவியாளர்கள் என்று ஏழு பேரை அழைத்து வருகிறார்களாம்.

உதவியாளர்கள் பேட்டா

உதவியாளர்கள் பேட்டா

ஷூட்டிங் நடந்தால் இவர்களுக்கான பேட்டா மட்டும், தினமும் சுமார் 70 ஆயிரத்தை தாண்டுகிறதாம். இதில் சில ஹீரோயின்கள் அந்த பேட்டாவை அப்படியே சுட்டுக்கொண்டு, உதவியாளர்களுக்கு சில ஆயிரங்களை மட்டும் கொடுப்பது தனிக்கதை. 'ஹீரோயின்களுக்கு சம்பளமும் கொடுத்து இந்த பேட்டாவை கொடுப்பதால் அதிக செலவாகிறது' என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அதிர்ச்சி பில்

அதிர்ச்சி பில்

இதற்கிடையேதான் அந்த இளம் ஹீரோயின், சாப்பாடுக்கு ரூ.1.50 லட்சம், லாண்டரிக்கு ரூ.1.40 லட்சம் என தயாரிப்பாளருக்கு கொடுத்த பில் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அவர் தெலுங்கில் இருந்த தமிழுக்கு இந்தி நடிகை. தீபாவளிக்கு வெடிப்பார்களே, அந்த பெயரில் ஒல்லி நடிகர் நடித்து சமீபத்தில் வந்த படத்தில் இவர்தான் ஹீரோயின்!

பஞ்சாயத்தின் தொடர்ச்சி

பஞ்சாயத்தின் தொடர்ச்சி

அதற்கு முன் கபடிகுழு இயக்குனரின் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நடிகைக்கும் தெலுங்கு பட தயாரிப்பாளருக்கும் பிரச்னை என்றும் ஓட்டல் பில்லை கட்டமாட்டேன் என்று தயாரிப்பாளர் சொன்னதால், யாரிடம் சொல்லாமல் அவர் எஸ்கேப் ஆனதாகவும் செய்திகள் வெளியானதே ஞாபகம் இருக்கிறதா? அந்த பஞ்சாயத்தின் தொடர்ச்சிதான் இது.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

நடிகையை, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். இரண்டு மூன்று நாட்கள்தான் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். ரூம் செலவை விட, சாப்பாடு மற்றும் லாண்டரி பில்தான், தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதனால்தான் கடுப்பான தயாரிப்பாளர், பில் கட்டமாட்டேன்று சொன்னாராம். என்னமோ போங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X