twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டை படத்தால் வந்த சங்கடம்... தத்தளிப்பில் தயாரிப்பு... தொடங்கிய படங்கள் வெயிட்டிங்!

    By
    |

    சென்னை: சண்டை படம் தந்த நஷ்டம் காரணமாக சங்கடத்தில் இருக்கும் தயாரிப்பு, தனது அடுத்த பட தயாரிப்புகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான சண்டை படத்தை இயக்கி இருந்தார், பெயருக்கு பின்னால் இன்ஷியலை வைத்திருக்கும் காமெடி பட இயக்குனர்.

    இதில் அந்த ஹைட்டான ஹீரோ நடித்திருந்தார். டாப் நடிகர்களும் நடித்திருந்தனர். படத்தின் பட்ஜெட் சுமார் 50 கோடி. பணத்தைத் தண்ணியாகச் செலவழித்து வெளிநாட்டில் எடுத்திருந் தார்கள் படத்தை.

    விட்டதை...

    விட்டதை...

    இதை தயாரித்திருந்த நிறுவனம் ஏற்கனவே சில படங்களைத் தயாரித்திருந்தது. அதில் சின்ன சின்ன நஷ்டங்கள். விட்ட பணத்தை இதில் கைப்பற்றிவிடலாம் என நம்பிக்கொண்டிருந்தார் தயாரிப்பு.

    அதிரடி திட்டம்

    அதிரடி திட்டம்

    இதற்காக அவர் தயாரித்திருந்த சில சிறுபடங்களையும் ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தார்.
    அதோடு அடுத்து சில படங்களை தொடங்கவும் அதிரடி திட்டம் வைத்திருந்தார்.

    கனவை கலைத்தது

    கனவை கலைத்தது

    இதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் அவர் கனவை மொத்தமாக கலைத்துவிட்டதாம் சண்டை படம். டப்பிங், சேட்டிலைட் உரிமை என போட்ட பணத்தில் கொஞ்சமாவது கிடைத்தால் தப்பிவிடலாம் என நினைத்திருந்தாராம்.

    சங்கடம்

    சங்கடம்

    ஆனால், எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்கிறார்கள். இப்படி சங்கடத்தைத் தந்திருக்கிற சண்டை படத்தால், அவர் தொடங்குவதாக வாக்குக் கொடுத்திருந்த சில படங்கள் அப்படியே நிற்கிறது.

    அட்வைஸ்

    அட்வைஸ்

    எடுத்து வைத்திருக்கும் சின்ன பட்ஜெட் படங்களையும் ரிலீஸ் பண்ணுவதை தள்ளி வைத்திருக்கிறாராம். 'ஏன் அகல கால் வைச்சீங்க? என்று அட்வைஸ் செய்கிறார்கள் சினிமாகாரர்கள்.

    English summary
    The producer who produced fight film with the height hero, has upset over that movie's flop and he has pushed the release of his upcomming movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X