சர்ச்சை நடிகை திருமணத்தை தள்ளிப்போட்டதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?
சென்னை: சர்ச்சை நடிகை திருமணத்தை தள்ளிப் போட்டதற்கு வேறு காரணம் உள்ளதாம்.
சர்ச்சை நடிகையும், இயக்குநர் ஒருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவி போன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகையை உடனே திருமணம் செய்து கொள்ளத் துடிக்கிறார் காதலர். ஆனால் நடிகை திருமணத்தில் விருப்பம் காட்டவில்லை.

திருமணம்
100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை அண்மையில் தெரிவித்தார். அவர் எப்ப 100 படத்தில் நடிப்பது, எப்ப கல்யாணம் பண்ணுவது என்று பேசத் துவங்கிவிட்டனர்.

நடிகை
நடிகை திருமணத்தை தள்ளிப் போட்டதற்கு உண்மையில் வேறு காரணம் உள்ளதாம். திருமணம் செய்து கொண்டால் உச்சத்தில் இருக்கும் மார்க்கெட் படுத்து தூங்கிவிடும் என்று அவரின் ஆஸ்தான ஜோதிடர் எச்சரித்தாராம். அதை வெளியே சொல்லாமல் 100 படம் என்று புதுக் கதையை கூறியுள்ளார் நடிகை.

பதவி
நடிகை அரசியலிலும் பெரிய ஆளாக வருவார் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளாராம். இன்னும் 5 ஆண்டுகளில் பெரிய பதவி நடிகையை தேடி வரும் என்றும் அதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஜோதிடர் கூறியுள்ளாராம்.

மகிழ்ச்சி
அரசியலில் பெரிய பதவி வரப் போகிறது என்று ஜோதிடர் கூறியதை கேட்டு நடிகைக்கு உச்சி குளிர்ந்தாலும் அது குறித்து யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்கிறாராம். அப்போ கல்யாணம்?


Click it and Unblock the Notifications











