பறக்குற படத்துல.. அந்த இசை பட நாயகிக்கு எப்படி சான்ஸ் கிடைச்சது தெரியுமா?

சென்னை: ஒரே ஒரு ஓடாத படத்துல நடிச்ச, அந்த புது முகத்துக்கு, பிரைட் நடிகர் படத்துல எப்படி வாய்ப்பு கிடைச்சதுன்னு, இப்போ கொஞ்சம் கொஞ்சமாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரைட் ஹீரோவுக்கு ஜோடியாக, முன்னணி நாயகிகளை புக் பண்ணாம, அந்த இசை படத்துல நடித்த நடிகையை புக் செய்தது கோலிவுட்டில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

தற்போது அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் அந்த மியூசிக் நடிகர் தான் என்பது தெரியவந்துள்ளது.

பறக்குற படம்

பறக்குற படம்

பிரகாசமான பெயரை கொண்ட அந்த பிரைட் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் அந்த பறக்குற படத்துக்கு, இசையமைக்க இந்த மியூசிக் நடிகரை இயக்குநர் ஒப்பந்தம் செய்திருந்தார். கடந்த ஆண்டு, அந்த ஒல்லி நடிகருக்கு, இவர் போட்ட மியூசிக், பிஜி.எம் எல்லாம் அதி பயங்கர ரெஸ்பான்ஸை அள்ளியதே அவர் இந்த படத்தில் இணைந்ததற்கு காரணம்.

ஹீரோயின் சிபாரிசு

ஹீரோயின் சிபாரிசு

பறக்குற படத்தை இயக்குற இயக்குநருக்கு பிரபல நடிகை எல்லாம் வச்சு எடுக்கும் பாலிசி கிடையாதாம். அதனால், தான் முதல் படத்துலேயே புதுசா ஒரு அதிரடி பீஸை கோலிவுட்டுக்கு களம் இறக்கினார். இந்நிலையில், இன்னொரு புது முகத்தை தேடிய அந்த இயக்குநருக்கு, மியூசிக் நடிகர், எங்க கிட்ட ஒரு ஹீரோயின் இருக்காங்க, ஒரே ஒரு ஓடாத படத்துல தான் நடிச்சிருக்காங்க என சிபாரிசு செய்துள்ளாராம்.

ஹீரோவுக்கு பிடிக்கலை

ஹீரோவுக்கு பிடிக்கலை

மியூசிக் நடிகருக்கு ஜோடியா நடிச்ச, நடிகையை தனக்கு நாயகியாக புக் செய்துள்ள விவரத்தை அறிந்த, அந்த பிரைட் நடிகர், இயக்குநரிடம், பெரிய படம் பண்றோம், ஹீரோயின் வேல்யூ வேண்டாமா? என் ரசிகர்கள் எப்படி ஏத்துப்பாங்க? போன்று ஜாடை மாடையாக தனக்கு அந்த நாயகியுடன் நடிக்க விருப்பம் இல்லை என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.

டெஸ்ட் ஷூட்

டெஸ்ட் ஷூட்

இந்த கதைக்கு, அந்த ஹீரோயின் ஷூட் ஆவாங்க என்பதை உணர்ந்து கொண்ட அந்த இயக்குநர், ஹீரோவிடம், சும்மா ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணலாம். அவங்க நடிப்பை பாருங்க, பிடிச்சிருந்தா ஓகே பண்ணலாம், இல்லைன்னா வேற பார்க்கலாம் என சொல்ல, டெஸ்ட் ஷூட்டில் பாஸ் மார்க் வாங்கிய நடிகை பிரைட் நடிகரின் பாராட்டுக்களையும் வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X