திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த பிரபலத்தின் மனைவி.. எல்லாத்துக்கும் காரணம் அந்த பழக்கம்தானாம்

By Staff

சென்னை: அந்த பிரபலத்தின் மனைவி திருமணம் மீறிய உறவு வைத்திருந்ததற்கு காரணம் முழுக்க முழுக்க போதை பழக்கம்தான் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரொம்பவே பிரபலமானவர் அந்த இயக்குநர். ஆரம்பகாலத்தில் பயங்கர கஷ்டப்பட்டு ஊரில் செமத்தியாக பல பிரச்னைகளில் சிக்கி பிறகு சென்னைக்கு வந்து அல்லோலகல்லோலப்பட்டு திரைத்துறையில் சேர்ந்தார். இதுவரை அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்தான். குறிப்பாக அவரது படம் என்றால் கண்டிப்பாக நம்பி போகலாம் என்ற நிலைதான் இன்னமும் ரசிகர்களில் ஒருதரப்பினருக்கு இருக்கிறது.

பலர் வாழ்வுக்கு காரணம்: இந்த இயக்குநர் பலரது வாழ்க்கை நிலைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். அதனாலேயே அவருக்கு கோலிவுட்டில் பெரிய மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை பல வருடங்களாக காத்துக்கொண்டு வந்தவருக்கு கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்து பஞ்சாயத்து பஞ்சாயத்துதான். தன்னை சுற்றி எழுந்த பஞ்சாயத்துக்களுக்கு வழக்கம் போலவே அமைதியாகவே இருந்தார் இயக்குநர்.

உச்சக்கட்டம்: ஒருவருக்கு தன்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் பிரச்னை வந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது ரொம்பவே கடினம்தான். அப்படி ஒரு பெரிய இடி இயக்குநரின் பெர்சனல் வாழ்க்கையிலும் வந்தது. திருமணத்துக்கு முன்பாக பல போதை பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தார். பிறகு தன் மீது அக்கறை இருப்பவர்களின் அறிவுரையாலும் குடும்பத்துக்காகவும் அந்த போதை பழக்கத்திலிருந்து வெளியில் வந்துவிட்டாராம்.

 The reason for the Celebrity wifes extramarital affair was drug addiction

மீண்டும் பழக்கம்: நிலைமை இப்படி இருக்க எப்போதும் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்கும் இயக்குநர் திடீரென அந்தப் பழக்கத்துக்குள் மீண்டும் சென்றாராம். அதற்கு அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவ சரியில்லை (மனைவி) அவள்ட்ட இத சொல்லவும் முடியல உள்ள போட்டு மெல்லவும் முடியல என்று காரணமாக சொன்னாராம். ஒருகட்டத்தில் மனைவியிடம் உண்மையை போட்டும் உடைத்துவிட்டாராம். எனவே மனைவியும் இனியும் திருமணத்துக்கு மீறிய உறவுக்குள் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து அடங்கி இருந்தாராம்.

நிறுத்தாத இயக்குநர்: ஆனாலும் தன் மனைவி இப்படி செய்துவிட்டாரே என்ற சோகத்திலும் திரைத்துறையில் தனக்கு நேர்ந்த சில பிரச்னைகளாலும் மன உளைச்சலுக்கு ஆளான இயக்குநர் வீட்டையே போதை அட்டியாக மாற்றிக்கொண்டிருந்தாராம். மனைவி பல முறை சொல்லிப்பார்த்தும் இயக்குநர் இப்போது மாறுகிறேன் அப்போது மாறுகிறேன் என்று மட்டும் சொன்னாரேயொழிய மாறுதலை செயலில் காண்பிக்கவே இல்லையாம்.

இதனால் உச்சக்கட்ட கடுப்பான மனைவி பழைய குருடி கதவ திறடி என்பதற்கேற்ப ஏற்கனவே உறவில் இருந்தவருடன் மீண்டும் நெருக்கம் காண்பித்துவிட்டாராம். அந்த நெருக்கம் படுக்கையறைவரை சென்று வயிற்றில் ஒரு கரு உருவாகும் அளவுக்கு வளர்ந்ததை அறிந்த இயக்குநருக்கு பேரிடி. இதை அறிந்து அதிர்ந்துபோன இயக்குநர் முழுக்க முழுக்க போதையிலேயே திளைத்துக்கொண்டிருந்தாராம்.

அப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு பட வாய்ப்பும் அவரிடமிருந்து நழுவி சென்றுவிட்டதாம். கரியரிலும் பிரச்னை, வீட்டிலும் பிரச்னை என இரு முனைக்கத்தியாக அவரை பிரச்னை நெருக்கிக்கொண்டிருந்ததாம். இருந்தாலும் தனது வாரிசுக்காக அமைதியாகவே இருந்திருக்கிறார் அவர். ஆனால் மனைவியின் ஆட்டம் உச்சக்கட்டம் சென்றதால் பொறுக்காத அவர் மனைவியை பிரிய முடிவு எடுத்திருக்கிறார். இது மனைவிக்கு உள்ளூர சந்தோஷம்தானாம்.

விஷயம் அறிந்த இயக்குநருக்கு நெருக்கமானவர்கள் இது நடந்துவிட்டால் அசிங்கமாகிவிடும் என முடிவெடுத்து இயக்குநரின் மனைவியிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு அவரோ, உங்க நண்பர் வீட்டையே பாராக்கி வைத்திருக்கிறார் நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன். அதனால் அவருடன் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். ஆனால் உண்மையான காரணம் அது இல்லை. எப்படா இவர் பிரிவார் நாம் இன்னொருவருடன் எப்போ ஜாலியா இருப்போம் என்று காத்திருந்தவருக்கு இயக்குநரின் போதை பழக்கம் ஒரு சாக்காகி இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X