ஒரு கிசு கிசு எப்படியெல்லாம் ரவுண்டு கட்டி எங்கே போய் நிக்குது பாருங்க!!

By Shankar

'சினிமாலதான் ஓடுதுன்னா.. பறக்குதுன்னு சொல்வாங்க' என்று ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.

மற்ற விஷயங்களை விட கிசுகிசுக்களுக்கு இந்த வழக்குச் சொல் ரொம்பவே பொருந்தும்.

என்ன அந்த ஹீரோவும் ஹீரோயினும் அடிக்கடி பார்த்து சிரிச்சிக்கிறாங்களாமே என்ரு சின்னதாக கொளுத்திப் போட்டு, அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பதற்குள், இருவருக்கும் திருமணமாகி, விவாகரத்தே நடந்து முடிந்திருக்கும்!

அப்படி வாயு வேகம் மனோ வேகத்தில் பரவும் சமாச்சாரம் இந்த கிசுகிசு!

நேற்று முன்தினம்தான் ஆரம்பித்தது ஒரு கிசுகிசு... நேற்று மாலை பார்த்தால்... அது கல்யாணத்தில் வந்து முடிந்திருந்தது.

சிம்பு - நயன்தாரா மேட்டர்தான்!

சிம்பு - நயன்தாரா மேட்டர்தான்!

அது வேறு ஒன்றும் இல்லை.. சிம்பு - நயன்தாரா மேட்டர்தான். சிம்பு படத்துக்கு நயன்தாராதான் நாயகி என்று பாண்டிராஜ்தான் முதலில் மேட்டரை பற்ற வைத்தார்.

காதல்

காதல்

உடனே, சிம்புவும் நயன்தாராவும் தங்கள் காதலைப் புதுப்பிச்சிட்டதா ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி பலவேறு வடிவம் எடுத்து, இருவரும் டீப்பாகக் காதலிப்பதாக உறுதிப்படுத்தியது.

பிரிவு

பிரிவு

தொடர்ந்து சிம்புவும் ஹன்சிகாவும் சுமுகமான முறையில் பேசி தங்கள் காதலை அறுத்துக் கொண்டதாக சில செய்திகள்...

கல்யாணமே நடத்திட்டாங்கப்பா..

கல்யாணமே நடத்திட்டாங்கப்பா..

அடுத்த முப்பது நிமிடங்களில், சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கல்யாணமே நடந்திடுச்சி என்று ஒரு செய்தி வந்தேவிட்டது!

இன்ட்ரஸ்டிங்கா இருக்கு...

இன்ட்ரஸ்டிங்கா இருக்கு...

இதையெல்லாம் நேற்று முழுக்கப் படித்த சிம்பு அடித்த கமெண்ட்... 'எனக்கொன்னும் வருத்தமில்ல.. இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கு.. அடுத்து எங்கதான் போய் நிக்குதுன்னு பார்க்கலாம்!'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X