தொடர்ந்து படம் பிளாப்.. கவலையில் நடிகை.. ஆறுதல் கூறி தனி ரூட்டு போட்ட ஒல்லி நடிகர் !

By Staff

சென்னை : தொடர்ந்து படங்கள் பிளாப்பானதால் கவலையில் புலம்பிய நடிக்கைக்கு ஆறுதல் கூறி தனி ரூட்டு போட்டுள்ளார் ஒல்லி நடிகர்.

முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து படு பிஸியாக இருந்த இந்த நடிகைக்கு, கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் சரியாக அமையாததால், இவர் நடித்த படங்கள் தோல்வியடைந்து வருகின்றன.

தொடர்ந்து படவாய்ப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தாலும், பெரிதாக படங்கள் வெற்றி பெறவில்லை.

படவாய்ப்புக்காக

படவாய்ப்புக்காக

சினிமாவுக்கு வந்த புதிதில், மெழுகு சிலை போல இருந்த இந்த நடிகைக்கு பாலிவுட் ஆசைவர, பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைப்பது, பிளாஸ்டிக் சர்ஜிரி செய்வது என நல்லா இருந்த உடம்பை கெடுத்துக்கொண்டு தற்போது, எலும்பும் தோலுமாக இருக்கிறார். ஆனால், பாலிவுட் பட வாய்ப்பு எதுவும் வந்தமாதிரி தெரியவில்லை. உடம்பு இளைத்தது தான் மிச்சம்.

கவலையில்

கவலையில்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இந்ததேசிய விருது நடிகை சமீபத்தில் ஸ்டார் நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, தெலுங்கில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடித்தார் அந்த படமும் மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், அந்த அம்மணி பெரும் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தனி ரூட்டு போட்ட ஒல்லி நடிகர்

தனி ரூட்டு போட்ட ஒல்லி நடிகர்

தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்து வருவதால், நடிச்சது போதும் என அந்த தேசிய நடிகையின் பெற்றோரும் கூறிவிட்டது தான், நடிகையின் புலம்பலுக்கு காரணமாம். படதோல்வியால் நடிகை மன வருத்தத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட ஒல்லி நடிகர் அவருக்கு ஆறுதல் கூறுவது போல தனி ரூட்டு போட்டு இருக்காரு. சமீபத்தில் ஒடிடியில் வெளியான படத்தைப் பார்த்து ஆஹா...ஓஹோ என அந்த நடிகையை ஏகத்திற்கும் புகழ்ந்து இருக்கிறார் அந்த ஒல்லி நடிகர்.

காப்பி இசையமைப்பாளர்

காப்பி இசையமைப்பாளர்

ஏற்கனவே, இந்த தேசிய நடிகைக்கும் காப்பி இசையமைப்பாளருக்கும் கசமுச என கோலிவுட்டில் தகவல் பரவிவரும் நேரத்தில், ஒல்லி நடிகர் இடையில் பகுந்து தேசிய நடிகைக்கு ஆறுதல் கூறுவது போல பேசி தனி ரூட்டு போட்டுள்ளது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக முனுமுனுக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X