தன்னோட ஆசைக்காக தயாரிப்பு நிறுவனத்தை ஊறுகாயா மாத்திட்டாரு.. டாப் நடிகர் பற்றி ஓபனா சொன்ன பிரபலம்?

By Staff

சென்னை: டாப் நடிகரின் இந்த படத்தை அவரது ரசிகர்களே பெரிதாக எதிர்பார்க்காத நிலையில், கடைசி நேரத்தில் லேசாக படத்திற்கு ஹைப் இருப்பது போல காட்டி கல்லா கட்ட முயற்சித்தனர். ஆனால், படம் வெளியான முதல் நாளிலேயே படம் பலருக்கும் குறிப்பாக இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கே பிடிக்காமல் போனது இந்த படத்தை ரொம்பவே நம்பி காத்துக் கொண்டிருந்த பல தியேட்டர் ஓனர்களுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளதாம்.

டாப் நடிகரின் படத்தை பெரும் தொகை கொடுத்தால் தான் தருவோம் என கடைசி நேரத்தில் படத்தை பற்றி கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி தயாரிப்பு நிறுவனம் பண்ண சேட்டைகளை எல்லாம் பார்த்து கடுப்பான பிரபல தியேட்டர் ஓனர் ஒருவர் புட்டு புட்டு வைத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gossip kollywood actors gossip

இந்த மாதமும் பெரிய வசூல் இல்லாமல் போகும் நிலை உருவாகி விட்டதே என்றும் இந்த ஆண்டு அந்த 2 பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே காப்பாற்ற வேண்டும் என்கிற முடிவுக்கே அவர் வந்துவிட்டதாகவும் இப்படி படம் சுமாராக இருக்க முழு காரணமும் இயக்குநர் கிடையாது என்றும் அந்த நடிகரின் ஆசை தான் என்றும் அந்த பிரபலம் பேசியுள்ளாராம்.

லாபம் கொடுக்கும்னு நம்பி மோசம்: இந்த முறை நிச்சயம் டாப் நடிகர் ஏமாற்ற மாட்டார் என்றும் இந்த முறையாவது நல்ல கதையை தேர்வு செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் படத்தை கொடுத்திருப்பார். தியேட்டர் முழுவதும் ரசிகர்கள் ரிப்பீட் ஆடியன்ஸாக வந்து படத்தை பார்த்து கண்டிப்பாக பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என நம்பி ஏகப்பட்ட கனவுகளுடன் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் ஓனருக்கு முதல் நாளே எதிர்பார்த்த வசூல் வரவில்லையாம்.

தயாரிப்பாளருக்கும் தலைவலி: தொடர்ந்து பெரிய ஹீரோக்களை நம்பி இஷ்டத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து படம் பண்ணி வரும் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. இந்த முறையும் அடிவாங்கினால் எழுந்திருக்கவே முடியாது என நினைத்து கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கியாவது படத்தை முடிக்க சிரமப்பட்ட தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிசல்ட்டை பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டதாம்.

டாப் நடிகரின் ஆசை: ஒவ்வொரு இயக்குநர்களும் இந்த கதையை பண்ண வேண்டாம் என நடிகரிடம் எடுத்துச் சொல்ல அவர்களையே தூக்கி வீச ஆரம்பித்துவிட்டார் என்றும் கடைசியாக இந்த இயக்குநர் நடிகருக்கு பிடித்த மாதிரி படம் பண்ணித் தருகிறேன் என உள்ளே வந்து கடந்த சில ஆண்டுகளாக பல கஷ்டங்களை சந்தித்த நிலையிலும், படத்தை முடிந்த வரை சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், நடிகரின் ஆசைக்கு தயாரிப்பாளரின் கோடிக்கணக்கான பணம் ஊறுகாயாவதா என பிரபல தியேட்டர் ஓனர் பேசியிருப்பது கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

அடுத்த படமும் ஹாலிவுட் படமா?: இந்த படம் மட்டுமின்றி நடிகர் அடுத்து நடித்து வரும் படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் கதை தான் என்றும் அந்த சிடியையும் நடிகர் தான் கொடுத்து படத்தை உருவாக்க அந்த இயக்குநருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் என்றும் அந்த படமாவது ரசிகர்களுக்கு பிடித்தது போல வருமா? என்கிற கேள்வி எழுந்திருப்பதாகவும் பிசினஸ் கண்டிப்பாக பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X