நீங்கள் சொல்லியே செஞ்சேன்.. ஒதுக்கினால் தற்கொலைதான்.. பெரிய குடும்பத்தை மிரட்டிய தயாரிப்பாளர்?..
சென்னை: பெரிய குடும்பத்தை தயாரிப்பாளர் பிளாக் மெயில் செய்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
சினிமாவில் பாரம்பரியமான குடும்பம் அவர்களுடையது. தந்தை முதல் தலைமுறையாக நடிக்க வந்து நல்ல பெயரை பெற்றார். அதேபோல் தனது மகன்கள், மகளையும் வளர்த்தார். மகன்களை சினிமாவுக்குள் விட தந்தைக்கு விருப்பம் இல்லையென்றாலும் தாடி இயக்குநரின் வற்புறுத்தலின்பேரில் மூத்தவர் நேராக நடிக்க வந்தார். படிப்படியாக வளர்ந்து முன்னணி ஹீரோவாகவும் மாறிவிட்டார்.

இரண்டாவது வாரிசு: மூத்த மகன் நடிகனாக பிறகு இரண்டாவது மகனும் நடிகரானார். ஆனால் இளையவருக்கு முதல் படமே ஜாக்பாட் அடித்தது. அந்த ஜாக்பாட் படத்தின் மூலம்தான் தன்னுடைய உறவுக்காரர் ஒருவரை தயாரிப்பாளராகவும் அறிமுகம் செய்தார்கள். ஆனால் அந்த அறிமுகம் துன்ப முகமாகும் என்பது அந்த பெரிய குடும்பத்துக்கு தெரியவில்லை.
பிரச்னை, பிரச்னை: இளையவர் நடித்த முதல் படத்தை இயக்குநர் உரிமை கொண்டாட தயாரிப்பாளரோ அந்த சீனெல்லாம் இல்லை படம் எனக்குத்தான் சொந்தம் என்று முஷ்டி முறுக்கினார். இதனால் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் முட்டிக்கொண்டது. இருவருக்கும் நடந்த பிரச்னையில் பெரிய குடும்பம் பெரிதாக தலையிடவில்லை முக்கியமாக பெரியவர் அமைதியாக இருக்கிறாரே என்ற வருத்தம் இயக்குநருக்கு பல வருடங்கள் இருக்கின்றன.
மீண்டும் பஞ்சாயத்து: பட விவகாரம் கோர்ட்டுக்கு சென்றாலும் சமீபத்தில் மீண்டும் பொதுவெளிக்கு இந்த பஞ்சாயத்து வந்தது. இந்த முறை நேராகவே சிலர் பெரிய குடும்பத்தை வைத்து செய்துவிட்டார்கள். விவகாரத்தில் பெரியவரின் பெயரும் வந்துவிட்டதால் தயாரிப்பாளர் உடனடியாக மன்னிப்பு கேட்டார். இதையெல்லாம் கவனித்த திரையுலகினர் அந்தக் குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா ஒழுங்காக அவரை கழற்றிவிட வேண்டியதுதானே என பேச ஆரம்பித்தனர்.
பிளாக் மெயில்: உண்மையில் சில வருடங்களுக்கு முன்பே அவரை குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டார்களாம். சில பண கையாடல்களில் தயாரிப்பாளர் தனது சித்து வேலையை காட்ட; மொத்தமாக துரத்திவிட்டுவிட்டார்களாம். ஆனால் தயாரிப்பாளரோ, 'நீங்கள் சொல்லித்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். இனி என்னால் வேறு எந்த தொழிலுக்கும் போக முடியாது. முதல் இரண்டு படங்களுக்குத்தான் உங்கள் பணத்தை கொடுத்தீர்கள். மற்ற படங்களுக்கு நான் என்னுடைய சொந்த பணத்தை போட்டு பயங்கர நஷ்டம் அடைந்துவிட்டேன்.
கம்பெனிக்கு வேறு பெயரை வைத்து எடுத்த படங்களும் ஓடவில்லை. எல்லாமே நீங்கள் சொல்லித்தான் செய்தேன். இனியும் என்னை நீங்கள் ஒதுக்கி வைத்து வேலை செய்தீர்கள் என்றால் நான் உங்கள் அனைவரது பெயரையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்." என்று பிளாக் மெயில் செய்தாராம். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெரிய குடும்பம், இது என்னடா வம்பா போச்சு என்றுதான் மீண்டும் அவரை குடும்பத்துக்குள் சேர்த்து நடிக்கவும் ஒத்துக்கொண்டனராம். அப்படித்தான் இப்போது வெப்ப நடிகர் அந்த தயாரிப்பாளரின் தயாரிப்பில் நடிக்கிறாராம்.
அதுமட்டுமின்றி வருஷத்துக்கு ஒரு படமாவது பச்சை பேனரில் நடிக்கவும் அந்த நடிகர்கள் ஒத்துக்கொண்டனராம். மேலும் வீர பஞ்சாயத்தில் தயாரிப்பாளருக்கு எதிராக குரல் கொடுக்கவும் முடியாமல்; படைப்பாளிகளை சமாளிக்கவும் முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்களாம் வாரிசு நடிகர்கள். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் எழுந்திருக்கின்றன..


Click it and Unblock the Notifications











