என்ன இருந்தாலும் குடும்ப பாசம்.. எனக்கு எதிராகவே ஸ்கெட்ச்சா?.. இசையமைப்பாளருடன் சண்டை போட்ட நடிகர்?

By Staff

சென்னை: இசையமைப்பாளருடன் மாஸ் நடிகர் சண்டை போட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரு நைட்டில் ஒபாமா ஆக முடியுமா என்ற கேள்வியை நம்முள் கேட்டிருப்போம். ஆனால் ஒரே பாட்டில் பிரபலம் ஆனவர் என்றால் இந்த இசையமைப்பாளர்தான். அவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகின. தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர் என்ற வரிசையில் சிறிய வயதிலேயே இணைந்துவிட்டார்.

There is a buzz in Kollywood that the mass actor had a fight with the music director

சம்பளத்திலும் ஓவர் டேக்: இசையில் ரசிகர்களின் ரசனை மாறிவருவதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் தற்கால தலைமுறைக்கு ஏற்ப பாடல்களையும் இசையையும் கொடுத்துவருகிறார். ஆனால் அவர் எவ்வளவுதான் ஹிட் கொடுத்தாலும் தமிழ் சினிமாவின் இசைக்கு வந்த சாபக்கேடு அவர்; தமிழை கொலையாக கொல்கிறார் என்ற விமர்சனமும் ஒருபக்கம் எழுந்திருக்கிறது. இருந்தாலும் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அவர்தான் இப்போதைக்கு நம்பர் 1 இடத்தில் இருக்கிறாராம்.

எல்லோரும் அவர் பக்கம்: அந்த இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் இப்போது பேய் மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஆம் உச்ச நடிகரிலிருந்து வளர்ந்துவரும் நடிகர்வரை அவரது இசையில் தோன்றவே ஆர்வமாக இருக்கின்றனர். அப்படிதான் இந்த மாஸ் நடிகரும் அந்த இசையமைப்பாளர் பக்கம் தலை சாய்த்துக்கொண்டார். இசையமைப்பாளரும் ஹீரோவுக்கு ஹிட் பாடல்களையும் பின்னணி இசையையும்தான் கொடுத்தார்.

பஞ்சாயத்து: நிலைமை இப்படி இருக்க இசையமைப்பாளர் உச்ச நடிகருக்கு சமீபத்தில் ஒரு பாடலை இசையமைத்தார். அந்தப் பாடல் வரிகள் பல பஞ்சாயத்துக்களை ஆரம்பித்துவைத்தது. அதிலும் ஒவ்வொரு வரியும் மாஸ் நடிகரை பயங்கரமாக அட்டாக் செய்யும்படிதான் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் இதை சாதாரணமாகவே நடிகர் எடுத்துக்கொண்டார். ஆனாலும் அவருக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

என்ன எண்ணம்?: அது என்னவென்றால் என்னதான் இருந்தாலும் அந்த வரிகளை இசையமைப்பாளர் நினைத்திருந்தால் நீக்கியிருக்கலாமே. ஆனால் அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்று எண்ணம்தான் அது. இதை வெளியில் காண்பிக்காமல் இருந்த நடிகர் பஞ்சாயத்துக்கள் தலைதூக்க ஆரம்பித்த பிறகு நேரடியாகவே இசையமைப்பாளரிடம், "எதற்காக இப்படி ஒரு வரியை அந்தப் பாடலில் யூஸ் பண்ண அனுமதி கொடுத்த நீ நினைத்திருந்தால் நீக்கியிருக்கலாம். என்னதான் இருந்தாலும் குடும்ப பாசம் விட்டுப்போகலல" என பேசினாராம். மேலும் அதற்கு பதிலடி தரும்படி எனக்கு நீ ஒரு பாட்டை கொடுத்தே ஆக வேண்டும் என கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்செட்: இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மியூசிக் டைரக்டர் என்னடா இது நம்மளை இவர் புரிஞ்சுக்கவே இல்லையே என்று புலம்பிக்கொண்டு உச்ச நடிகருக்கு கொடுத்தது மாதிரி இந்த நடிகருக்கும் ஒரு பாடலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் காபி படத்துக்கு ஒரு பாடலை கொடுத்தாராம்.

ஆனால் அந்தப் பாடல் போதிய வரவேற்பை பெறாமல் என்னப்பா இந்த மியூசிக் டைரக்டர் ஒரே ஜானரிலேயே பாட்டை தருகிறார் என்ற முணுமுணுப்பை சம்பாதித்தது. அது ரொம்பவே அப்செட்டை கொடுத்துவிட்டதாம். மேலும் ஹீரோக்கள் பஞ்சாயத்துக்குள் ஏன் என்னை இழுக்கிறார் என்று தனக்கும் நடிகருக்கும் நெருக்கமான இயக்குநர்களிடம் புலம்பி தள்ளுகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X