Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது, வேற போட்டி.. அங்கேயும் அந்த ஹீரோயினுக்கு டப் ஃபைட் கொடுக்கப் போறாராமே இந்த நடிகை!
சென்னை: இளம் ஹீரோயின் ஒருவர், அந்த உயர நடிகைக்கு கடும் போட்டியை கொடுப்பதால் உர்ராகி இருக்கிறாராம் நடிகை.
சினிமாவில் எல்லாவற்றுக்கும் போட்டிதான். ஏராளமான புதுமுகங்களும் திறமையானவர்களும் என்ட்ரியாகி கொண்டே இருப்பதால் போட்டிகளை தவிர்க்க முடியாது.
இருந்தும் திறமையானவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

கேட்கவே வேண்டாம்
அதுவும் நடிகைகள் விஷயத்தில் கேட்கவே வேண்டாம். போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் எப்போதும். முன்னேறத் துடிக்கும் ஹீரோயின்கள் சிலர், மற்றவர்களின் வாய்ப்புகளை அப்படியே பறிக்கும் வேலைகளும் திரைமறைவில் நடப்பது சகஜம்தான். இதுக்கு பல உதாரணங்களை சொல்கிறார்கள்.

சினிமாவில் பஞ்சமில்லை
இதுபற்றிய செய்திகளுக்கும் சினிமாவில் பஞ்சமில்லை. இளம் ஹீரோயின்கள் முதல் அம்மா கேரக்டர் நடிகைகள் வரை, நடிகைகளுக்குள் போட்டி கன்னாபின்னாவென இருக்கிறதாம். இது கொரோனாவுக்கு பிறகு கொஞ்சம் நஞ்சமல்ல, அநியாயத்துக்கு அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு பெயர் நடிகை
அதுவும், டோலிவுட்டில் இருந்து வந்திருக்கும் அந்த இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருக்கும் நடிகைக்கும் கொஞ்சம் உயரமான அந்த நடிகைக்குமான போட்டி ஜிவ்வென்று ஏறியிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த உயர நடிகையும் இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருப்பவர்தான்.

ஆவேசப் போட்டி
இந்த இரண்டு ஹீரோயின்களுமே தமிழில் ஒரு படத்தில்தான் நடித்து இருக்கிறார்கள். அடுத்து டாப் ஹீரோ படங்களை பிடிக்க நடக்கிறது ஆவேசப் போட்டி. இதற்கிடையே உயர நடிகை தெலுங்கில் டாப் ஹீரோ படத்தில் நடித்தால், அடுத்து அந்த ஹீரோ படத்தை டப்பென்று கைப்பற்றி விடுகிறாராம் இரண்டு பெயர் நடிகை.

உயர நடிகை
இப்போது அந்த உயர நடிகை பாலிவுட்டிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். விடுவாரா இரண்டு பெயர் நடிகை? நானும் வர்றேன் போட்டிக்கு என்று மனதுக்குள் சபதம் எடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினார். அவர் ராசியோ என்னவோ, அந்த முயற்சி வீண் போகவில்லை.

கால்ஷீட் இல்லை
ஆரம்பத்தில் சின்ன படங்களில் வந்த வாய்புகளை, கால்ஷீட் இல்லை என்று பொய் சொல்லி சம்மதிக்கவில்லையாம். பிறகு பெரிய ஹீரோ படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லி அப்படியே அமுக்கி விட்டாராம். அந்த அறிவிப்பு வந்ததுமே நடிகையின் முயற்சிக்கு அடுத்த பலன்.

சொல்லி சொல்லி
பிரபலமான ஹீரோ ஒருவர் படத்தில் நடிக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அதைத் தனக்கு வேண்டியவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாராம், அந்த இரண்டு பெயர் நடிகை. இதற்கிடையே அந்த நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு காரணமாக, உயர நடிகை கடுப்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.