அதுவும் இல்லை.. இதுவும் இல்லையா.. நம்பர் நடிகையின் பல கோடி கனவு என்ன இப்படி ஆகிடுச்சே?

By Staff

சென்னை: பரம சீக்ரெட்டாக திருமணத்தை நடத்திய நிலையில், பல கோடிக்கு அந்த பெரிய நிறுவனத்துக்கு விற்கப் போவதாக சொன்னதெல்லாம் என்ன ஆனது என்கிற கேள்வி கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சலாக கிளம்பி உள்ளது.

நம்பர் நடிகைக்கும் அவரது கடைசி காதலருக்கும் சமீபத்தில் திருமணம் ஊரே பிரம்மித்துப் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடாமல் பொத்தி பாதுகாத்து வந்த நிலையில், தற்போது அனைத்திற்கும் என்ன ஆனது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அவரே ரிலீஸ் பண்ணிட்டாரு

அவரே ரிலீஸ் பண்ணிட்டாரு

நடிகையின் காதலரே கடந்த ஒரு மாத காலமாக பரம ரகசியமாக வைத்திருந்த முக்கிய நிகழ்வுகளையும் புகைப்படங்களையும் தற்போது அவரே ரிலீஸ் பண்ணிவிட்டார். வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் கலந்து கொண்டதை பார்த்து மெய்சிலிர்த்து ஏதோ இன்னைக்குத் தான் திருமணம் ஆனது போல மீண்டும் அந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தூவ ஆரம்பித்துள்ளனர்.

அந்த பிசினஸ்

அந்த பிசினஸ்

நம்பர் நடிகையின் திருமணத்தின் இடத்தை மாற்றியதே அதை வீடியோவாக எடுத்து பெரிய நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமத்துடன் விற்கத்தான் என கிளம்பிய கதையெல்லாம் என்ன ஆனது என்கிற கேள்வியை கோடம்பாக்கத்தில் உள்ள சில பிரபலங்களே கிளப்பி உள்ளனர். அந்த சில பிரபலங்களை பார்க்கத்தானே ஏதாவது ஒன்றில் வெளியானால் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதையும் இப்படி வெளியிடுறாங்களே என்ன மேட்டருன்னு விசாரித்தால், ஏகப்பட்ட பேச்சுக்கள் பூதம் போல கிளம்பி உள்ளன.

கைவிரித்த நிறுவனம்

கைவிரித்த நிறுவனம்

நம்பர் நடிகை போட்ட பல கோடி கனவு திட்டத்தில் கல்லெறிந்து விட்டதாம் அந்த பிரபல நிறுவனம். நீங்க சொல்ற தொகைக்கு எல்லாம் இதை வாங்கினால், எங்களால் அந்த அளவுக்கு லாபம் ஈட்ட முடியாது என ஏற்பட்ட பஞ்சாயத்துக் காரணமாக அந்த பெரிய நிறுவனம் அதிலிருந்து ஒரே அடியாக பின் வாங்கி விட்டதாக சிலர் கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

நடிகையின் முடிவு

நடிகையின் முடிவு


எங்கே போனாலும், ஒரு பிரச்சனை கூடவே வருது, இதை அப்படி ரிலீஸ் செய்து மேலும், சில பிரச்சனைகளை ஏன் சந்திக்க வேண்டும், அப்படியே விட்டுவிடுவோம், நிம்மதியாக இருக்கலாம் என நடிகை பின் வாங்கிய நிலையில், தான் காதல் கணவர் தற்போது அனைத்து விஷயங்களையும் கட்டவிழ்த்து வருவதாக கூறுகின்றனர். இது வெறும் டிரைலர் தான் மெயின் பிக்ச்ர் நிறைய இருக்கு அதற்கான ஈர்ப்பு வலை தான் என்றும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அதுவும் இல்லை

அதுவும் இல்லை

ஒளிபரப்பு மட்டுமின்றி வரவேற்பு நிகழ்ச்சியும் இனி இருக்காது என்கிற அறிவிப்பாகவே இதை வெளியிட்டு உள்ளனர் என்றும் கூறுகின்றனர். எல்லாம் முடிஞ்சு ஒரு மாசம் ஆன பின்னரும், இன்னுமா? அதை எதிர்பார்த்துட்டு இருக்கீங்க என சில பிரபலங்களே கேலியாக பேசி வருவதும் கோடம்பாக்கத்தில் பலமாக கேட்கத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X