»   »  வாய்ப்பு கேட்ட ஒல்லி.... திருப்பி அனுப்பிய பிரமாண்டம்

வாய்ப்பு கேட்ட ஒல்லி.... திருப்பி அனுப்பிய பிரமாண்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகளில் இவரின் இடுப்பு மாதிரி வேறு யாருக்கும் இல்லை என்பதே இவரின் சிறப்பாக அமைய, இஞ்சி இடுப்பழகி பட்டத்துடன் வலம் வந்தார் அந்த அக்கட தேசத்து நடிகை.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் வாய்ப்புகள் தேடிவர நன்றாக சென்று கொண்டிருந்தது அவரின் திரை வாழ்க்கை. திடீரென்று இந்திப்படங்களில் நடித்து இந்திய நடிகையாகி விட அவரின் மனது துடித்தது.

தன்னைத் தேடி வந்த தமிழ், தெலுங்கு படங்களை எல்லாம் துச்சமாக மதித்து விட்டு இந்திப்படங்களில் நடிக்கப் போனார். அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லையாம்.

கைவசம் படங்கள் எதுவும் இல்லாததால் மீண்டும் தனக்குத் தெரிந்த தெலுங்கு பட இயக்குனர்களுக்கு போனைப்போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம். தெனாவட்டாகப் போனதால் மீண்டும் நடிகையை வைத்து படமெடுக்க இயக்குனர்கள் யோசிக்கிறார்களாம்.

இதனால் நொந்து போன நடிகை தமிழில் தன்னை வைத்து நட்பான படம் இயக்கிய பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறாராம்.

ஆனால் இயக்குனரோ முந்தைய படத்தில் நடிகை செய்த டார்ச்சர்களை நினைத்துப் பார்த்து ‘யோசித்து சொல்கிறேன்' என்று திருப்பி அனுப்பி விட்டாராம்.

இதனால் தற்போது ஏகத்துக்கும் நொந்து போயிருக்கிறாராம் அந்த 'ஒல்லி பெல்லி'நடிகை...

English summary
Thin Actress Directly Meet Grand Director and Asking Movie Chance. But The Director Replied the Actress "I Think After Says".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil