»   »  ரவுடி படத்தை தடுத்த ஒல்லி ஹீரோ!

ரவுடி படத்தை தடுத்த ஒல்லி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'ன்னாச்சு' நடிகரையும், நம்பர் நடிகையையும் ஒன்று சேர்த்து சென்ற ஆண்டு ரவுடி படத்தை தயாரித்தார் ஒல்லி நடிகர். ஆனால் அதில் ஏகப்பட்ட மன வருத்தங்கள்தான் மிச்சம்.

வம்புவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு வாய்ப்பில்லாமல் சுற்றித் திரிந்த அந்த இயக்குநரைக் கூப்பிட்டு படம் கொடுக்க, அவரோ நம்பர் நடிகையை பிக்கப் பண்ணி லவ்விக்கொண்டு ஷூட்டிங் செலவை அதிகமாக்கிவிட்டார். இதனால் கடுப்பான ஒல்லி இரண்டு பேர் மீதும் இன்னும் காண்டில்தான் இருக்கிறாராம்.

Thin hero stopped Rowdy hero's new movie

இயக்குநர் அடுத்து இயக்கவிருப்பது ஒல்லி நடிகரின் சமீபகால எதிரியும், அவரது சிஷ்யனுமான சங்கத் தலைவரை. அந்த படம் தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்பதால் அந்த கேப்பில் ரவுடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டாராம் இயக்குநர். ஜோடி அதேதான். இதற்கு மொபைல் கம்பெனி தயாரிப்பும் ஓகே சொல்லிவிட்டது.

இப்படி ஒரு காம்பினேஷன் இணையப்போவதை அறிந்த ஒல்லி உடனே தயாரிப்பை தொடர்புகொண்டு சில வரிகள் பேசி போனை கட் செய்துவிட்டார். அவ்வளவுதான்... ஜகா வாங்கிவிட்டதாம் மொபைல் கம்பெனி. அப்படி என்ன சொன்னார் என்றுதான் தெரியவில்லை!

English summary
Sources say that Thin actor has stopped the next movie of 'Innachu' actor and nine actress new movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil