அந்த பிரமாண்ட காவிய படத்துக்கு விருது ஹீரோயினை கன்சிடரே பண்ணலையாம்.. அதுக்கு இதுதான் காரணமாமே!

By

சென்னை: அந்த காவிய படத்துக்கு விருது நடிகையை கன்சிடரே பண்ணவில்லையாம். அதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள்.

Recommended Video

Mugen Rao காதலிக்கு ஏற்பட்ட கொடுமை • Yasmin Nadiah

அந்த பிரபலமான தெலுங்கு ஹீரோ நடிக்கும் படங்களை, இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த பிரமாண்ட இயக்குனரின் வரலாற்றுப் படத்தில் நடித்த பிறகு, அவர் மார்கெட் இப்படி மாறி இருக்கிறது.

பீரியட் காதல் கதை

பீரியட் காதல் கதை

இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் கன்னாபின்னாவென அதிகரித்து இருப்பதால் இப்படி எடுக்கிறார்கள். குறிப்பாக நடிகைக்கு ரசிகைகள் அதிகமாம். இந்நிலையில், அவர் இப்போது நடித்து வரும் பீரியட் காதல் கதையை கொண்ட படத்தையும் மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். கொரோனாவால் அதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது.

சயின்ஸ் பிக்சன்

சயின்ஸ் பிக்சன்

நிலைமை சரியான பிறகு ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பிறகு அவர் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதையும் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக எடுக்க இருக்கிறார்கள். இந்தப் படங்களுக்கு இடையே அவர் காவிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

கடவுளாக நடிக்கிறார்

கடவுளாக நடிக்கிறார்

அதில், அவர் அந்த கடவுளாக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். மெகா பட்ஜெட்டில் உருவாகும் அந்தப் படம் சவாலானது, அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஹீரோ. படத்தின் இயக்குனர், சில பயிற்சிகளை மேற்கொள்ள சொல்லி இருக்கிறார் அந்த ஹீரோவிடம். அதற்கான வேலையில் இருக்கிறார் அவர்.

விருது நடிகை

விருது நடிகை

இந்நிலையில் அந்தப் படத்தின் நாயகியாக, விருது வாங்கிய பிரபல நடிகை நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதுபற்றி நடிகை எதுவும் சொல்லவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது, இது. இதற்கிடையே, அந்த ஹீரோவுக்கு ஜோடியாக, விருது நடிகையை கன்சிடரே பண்ணவில்லை என்கிறார்கள்.

ஹீரோவின் உயரம்

ஹீரோவின் உயரம்

அதற்கு காரணமும் சொல்கிறார்கள். 'ஹீரோவின் உயரம் கன்னா பின்னாவென்று இருக்கிறது. அவருக்குப் பொருத்தமான நடிகைதான் அதில் நடிக்க முடியும். உயரம் குறைவான நடிகைகள் அவருக்கு பொருந்தமாட்டார்கள் என்பதால், விருது நடிகை பற்றி பேசவில்லை. பிரபல இந்தி நடிகை ஒருவரிடம் படக்குழு பேசிவருகிறது என்கிறார்கள். என்னமோ போங்கப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X