»   »  ஒரு படத்தில நடிச்சதுக்கே அரை லட்சமா? ஆளை விடுங்கப்பா

ஒரு படத்தில நடிச்சதுக்கே அரை லட்சமா? ஆளை விடுங்கப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திர சேனலின் பிரபல தொகுப்பாளினி சமீபத்தில் வெளியான மணியானவரின் படத்தில் நடித்தார். படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அந்த தொகுப்பாளினி, தற்போது தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டாராம்.

சினிமா ஆடியோ வெளியீட்டு விழா என்றால் முன்பெல்லாம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாங்கி கொண்டு தொகுத்து வழங்கி வந்தாராம். இப்போது அரை லட்சத்திற்கு குறைந்தாலும் நோ சொல்லிவிடுகிறாராம். இத்தனைக்கும் இவரது கைவசம் எந்த படமும் இல்லை. ஆனால் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.

This compere raises her salary

இதனால் பட தயாரிப்பாளர்கள் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும்' என்று எதிர்பார்க்காமல் குறைந்த சம்பளத்திற்கு வரும் தொகுப்பாளினிகளை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழாவை முடித்து விடுகிறார்களாம். ரம்யத்தின் வாய்ப்பு எல்லாம் இப்போது புது தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு கிடைப்பதால் அவர் காட்டில் செம்ம மழையாம்.

English summary
This TV compere has hiked her salary double.
Please Wait while comments are loading...