»   »  ஆந்திரா மருமகளுக்கு டாடா காட்டப்போகும் ஆடுகள இயக்குநர்

ஆந்திரா மருமகளுக்கு டாடா காட்டப்போகும் ஆடுகள இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவின் மிகப்பெரிய நடிகர் குடும்பத்திற்கு மருமகளாகப் போகும் தமிழ் நடிகைக்கு விரைவில் டாட்டா காட்டப்போகிறாராம் ஆடுகள இயக்குநர். ஒல்லிப்பிச்சான் படத்தில் இருந்து சமத்தான நடிகை விலகினார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூவுகிறது கோலிவுட் பட்சி

தொடர் தோல்வியால் ஓய்ந்திருந்த நாயகிக்கு சில வெற்றிகளால் சமீபத்தில்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், எல்லாவற்றுக்கும் நோ சொல்லியவர் ஆடுகள இயக்குநர் படத்திற்கு ஓகே சொன்னார் காரணம் ஹீரோ ஒல்லிப்பிச்சான் நடிகர் என்பதால்தானாம். ஏற்கனவே தங்கமான படத்தில் அவருடன் ஜோடி போட்டவர்தான் இந்த நடிகை.

This director will show bye bye to that actress

அந்தப் படத்தில் கமிட் ஆகும்போது அவரது திருமணம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், இப்போது திருமணம் பற்றி தினசரி ஒரு செய்தி வெளியாகிறது.

மாமியார் வேறு அப்படி இப்படி நடிக்காதே என்று அட்வைஸ் வேறு செய்து வருகிறார். நடிகையும் படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்து திருமணத்துக்கு ரெடியாக வேண்டும் என்று நடிகை எடுத்த முடிவு, இயக்குநரை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியதாக தகவல்.

எதுக்கு வம்பு இவருக்கு பதில் அவர் என்று நடிகையையே மாற்றிவிடலாம் என்று முடிவுக்கு வந்த இயக்குநர் தற்போது வேறு நடிகைகளுடன் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒல்லிப்பிச்சான் நடிகருடன் இயக்குநர் இணைந்த விருது படத்திலும், முதலில் நம்பர் நடிகையை வைத்து சில நாள்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு, பிறகு வெள்ளாவி நடிகையை மாற்றியது நினைவிருக்கலாம். அதே போலத்தான் இப்போது நடக்கும் போலிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.

English summary
The aadukalam director is all set to say bye to Andhra actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil