இதுதான் லேட்டஸ்ட் பேக்கரி டீலிங்!
'அவன் தூக்கு மாட்டிக்க மாட்டான்னு எனக்கு தெரியும். ஆனா 150 ரூபா கதவு போய்டுச்சே...' என்று செந்திலின் பாட்டி அலறுவார். பதிலுக்கு கவுண்டமணி 'கிழவியும் பேரனும் சேர்ந்து 150 ரூபாய்க்கு தான் இந்த டிராமா போட்டீங்களா? நல்லா சேர்ந்தீங்க ஏறுல பூட்டுன எருமை மாதிரி' என்று துப்பிவிட்டுப் போவார்.
இந்த காமெடி ஸீன் எதற்கு இப்போ என்கிறீர்களா?
சர்ச்சைக்குரிய படத்தின் காட்சிகள், வசனங்கள் விஷயத்தில் எதுவுமே நீக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட கட்சி ஆட்கள் திடீரென்று கப்சிப் ஆகிவிட்டார்கள். அதற்கு காரணம் இன்னொரு டீலிங்தானாம். சனிக்கிழமையன்று ஒரு பெரிய தொகை கைமாறியதாம். அந்த டீல் முடிந்ததும் வாங்கிய தொகைக்கு விசுவாசமாக பிரச்னை முடித்து வைக்கப்பட்டது என்கிறார்கள்.
படம் வெளியாக நாள் குறிக்கப்பட்டதிலிருந்து ஒரே டீலிங்மயம்தான்!
முதலில் சொன்ன காமெடி எதற்கு என்று இப்போது புரிகிறதா?


Click it and Unblock the Notifications











