பிரபல நடிகரின் படத்திலிருந்து விலகிய நடிகை.. காரணம் ‘இது’ தான்.. முன்னாடி சொன்னதெல்லாம் சும்மா!
பிரபல நடிகரின் படத்திலிருந்து நடிகை விலகியதற்கு காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவில் கை நிறைய படங்களுடன் வலம் வரும் நடிகரின் படத்தில் முன்னாள் கனவுக்கன்னி ஒருவர் பாதியில் விலகினார். இதனால் அந்த இடத்தில் மாதா நடிகை நடித்தார்.
ஆரம்பத்தில் ஏன் அந்த நடிகை பாதியிலேயே படத்தில் நடிக்க மறுத்தார் என்பது குறித்து காரணம் சொல்ல படக்குழு மறுத்துவிட்டது. பின்னர் அப்படத்தின் இசை வெளியீட்டில், காட்சி ஒன்றில் சரிவர நடிக்க முடியாதது தான் நடிகையின் விலகலுக்கு காரணம் என படத்தில் நடித்தவர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கத்தரி காட்சிகள்:
தற்போது மாதா நடிகை நடித்துள்ள அந்த கதாபாத்திரம், ஏறக்குறைய வானம் கலர் பட நடிகை கதாபாத்திரம். இதனால் படத்தில் சில கத்தரி போடும் காட்சிகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

செகண்ட் இன்னிங்க்ஸ்:
விலகிய நடிகை கனவுக்கன்னியாக இருந்தபோதே, கவர்ச்சியாக நடித்ததில்லை. குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து திறமையான நடிகை எனப் பேர் வாங்கியவர். பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளார் நடிகை.

இமேஜ் கெட்டுவிடும்:
இப்போது போய் இப்படியான சர்ச்சை வேடங்களில் நடித்து தன் இமேஜைக் கெடுத்துக் கொள்ள நடிகை விரும்பவில்லை போலும். அதனால் தான், பாதியிலேயே படத்தில் இருந்து நடிகை கழண்டு கொண்டார். ஆனால், இது தான் உண்மைக்காரணம் என தெரிந்தால், வித்தியாசமான வேடங்கள் வராது என அமைதி காத்துக் கொண்டார்.

நடிப்பிற்கு சவால்:
தற்போது அந்த கதாபாத்திரம் குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. விலகிய நடிகைக்குப் பதில் நடிக்கும் வேறொரு நடிகை, ஏற்கனவே சர்ச்சை கதாபாத்திரங்களில் நடித்தவர் தான். எனவே, இப்பாத்திரத்தையும் தனது நடிப்பிற்கு கிடைத்த சவாலாக ஏற்று சிறப்பாக நடித்துக் கொடுத்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











