பனிப்போர்.. அந்த ஒல்லி நடிகருடன் நம்பர் நடிகை ஜோடி சேராமல் இருக்க அது தான் காரணமா?
சென்னை: சமீபத்தில் அந்த ஒல்லி நடிகரும், நம்பர் நடிகையும் இணைந்து நடித்த அந்த சூப்பர் ஹிட் படம் டிவியில் ஒளிபரப்பாகி வைரலானது.
இந்நிலையில், இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இந்த ஜோடி ஏன் தொடர்ந்து இணைந்து நடிக்கவில்லை என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருவரும் தொடர்ந்து நடிக்காததற்கு அந்த பிரபல நடிகர் தான் காரணம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சூப்பர் ஹிட்
அண்ணன் இயக்கத்தில் தெலுங்கில் ஹிட் அடித்த அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்த அந்த ஒல்லி நடிகருக்கு ஜோடியாக நம்பர் நடிகை நடித்திருந்தார். காதல், காமெடி, ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் என கலந்து கட்டிய கதையம்சத்துடன் கூடிய அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

செம ஜோடி
ஒல்லி நடிகருக்கும் நம்பர் நடிகைக்கும் அந்த படத்தில் செம ஜோடி பொருத்தம் இருக்கும். கொரோனா கலவரத்தால் பழைய சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் தூசி தட்டி போட்டு வரும் டிவி சேனல்கள், சமீபத்தில் அந்த சூப்பர் ஹிட் படத்தையும் ஒளிபரப்பி டி.ஆர்.பியை எகிற வைத்தது.

கிளம்பிய சந்தேகம்
சமீபத்தில் அந்த படத்தை பார்த்த பல 2 கே கிட்ஸ்களுக்கு, இப்படியொரு ஜோடி ஏன் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் கிளப்பி உள்ளனர். 2 கே கிட்ஸ்களின் கேள்விகளுக்கு சில 90ஸ் கிட்ஸ்கள் விவகாரமான வித விதமான குட்டி ஸ்டோரிகளை கூறி வருகின்றனர்.

இதுதான் காரணமா?
வம்பு நடிகருடன் காதல் முறிந்த நிலையில், ஒல்லி நடிகரின் அந்த படத்தில் ஜோடி சேர்ந்து நம்பர் நடிகை நடித்திருந்தார். அதன் பின்னர், இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கலாம் என்ற ஏற்பாடுகள் நடந்த நிலையில், இதற்கு அடுத்த வருடம் ரிலீசான மாஸ் நடிகர் படத்தில் நடித்த நடிகைக்கு இயக்குநருடன் ஏற்பட்ட காதல் தான் அந்த நடிகரை அப்செட் ஆக்கியதாக கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

ஆனால்
ஆனால், அந்த ஒல்லி நடிகர் தயாரிப்பில் இளம் மாஸ் நடிகர் நடித்த அந்த மராத்தான் படத்தில் ஒரு பாடலுக்கு அந்த நடிகை ஒல்லி நடிகருடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார். அதே போல, அந்த ஒல்லி நடிகர் தயாரிப்பில் வெளியான அந்த ரெளடி இயக்குநரின் படத்திலும் நம்பர் நடிகை நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பனிப்போர்
ஆனால், அப்படியொரு மாஸ் ஹிட் கொடுத்த அந்த ஜோடி ஏன் தான் மீண்டும் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்ற ரசிகர்களின் நியாயமான ஆதங்கம் புரிந்தாலும், அந்த ஒல்லி நடிகருக்கும், நம்பர் நடிகைக்கும் இடையே இருக்கும் பனிப்போருக்கான உண்மையான காரணம் தான் இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











