அடம்பிடித்த பாஸ் நடிகர்.. அழுத்தம் கொடுத்த நிர்வாகம்.. அதை பண்ணதும் திட்டம் நிறைவேறிடுச்சாம்!

By Staff

சென்னை: அந்த ரியாலிட்டி ஷோவில் இருந்து பாஸ் நடிகரை கடந்த சீசனிலேயே மாற்றிவிட வேண்டும் என நிர்வாகம் திட்டமிட்டு இருந்த நிலையில், நான் தான் நிகழ்ச்சியை செய்வேன் என நடிகர் அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் தலையை ஆட்டினார்களாம்.

ஆனால், தொடர்ந்து நிகழ்ச்சியின் போக்கு டல் அடிக்க ஆரம்பிக்க, ரசிகர்கள் இளையவர் யாராவது நிகழ்ச்சியை நடத்தினால் நல்லா இருக்கும் என பேச்சுக்கள் கிளம்பியதும் மீண்டும் அந்த பாஸ் நடிகருக்கு நிர்வாகம் அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ஏன் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டார் என்பதற்கு பின்னணியில் ஒரு பெரிய கதையே கூறப்படுகிறது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

அந்த ரியாலிட்டி ஷோவுக்கு சென்றால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டு தான் அந்த பாஸ் நடிகர் நிகழ்ச்சியை நடத்தவே சம்மதம் தெரிவித்தாராம். ஆரம்பத்தில் நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகத்துக்கு அவரது பெயர் மற்றும் முகம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்ல பெரிய முகவரியாக இருக்கும் என்பதால், அவரது வருகைக்காக மேலும், சில கோடிகளை கூடுதலாகவே கொடுத்து ஒப்பந்தம் செய்து விட்டனர்.

வெளுத்து வாங்கினார்

வெளுத்து வாங்கினார்

எல்லா துறையிலும் தனது முத்திரையை பதித்து வந்த அந்த நடிகரும் எந்தவொரு பந்தாவும் காட்டிக் கொள்ளாமல் சகஜகமாக நிகழ்ச்சியை நடத்த தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து பல சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். ஆனால், சமீப காலமாக அவர் நடத்தும் நிகழ்ச்சிகள் முன்பு போல சுவாரஸ்யம் தூக்கலாக இல்லை என்கிற விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், நிர்வாகத்துக்கும் ரேட்டிங் ரீதியாக மிகப்பெரிய பின்னடவை சந்தித்ததால் அப்செட் ஆகிவிட்டதாம்.

வர மாட்டார்

வர மாட்டார்

மீண்டும் சினிமா மற்றும் மற்ற விஷயங்களில் அவர் பிசியாகி விட்டார். இனிமேல், அவரே இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வார் என மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் காத்திருந்த நிர்வாகத்துக்கு மீண்டும் ஒரு பெரிய இடியாக பல தடைகளை கடந்தும் தானே நிகழ்ச்சியை நடத்துவேன் என்பதில் பிடிவாதம் காட்டி உள்ளாராம்.

சம்பளம் குறைப்பு

சம்பளம் குறைப்பு

இந்த விஷயத்தை எப்படி சரி செய்வது என நினைத்த நிர்வாகம், தளம் மாறியதால், வருமானமே வரவில்லை என்கிற புலம்பலை பேச ஆரம்பித்துள்ளது. மேலும், சமீபத்தில், நடிகருக்கு வழங்கி வந்த சம்பளத்திலும் கணிசமான சில கோடிகளை குறைப்பதாக அறிவித்ததன் நடிகர் இங்கே இருந்து நகர காரணம் என்கின்றனர்.

ஆரோக்கிய பிரச்சனை

ஆரோக்கிய பிரச்சனை

சம்பளம் குறைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நடிகருக்கு முன்பை போல ஒரே நாளில் பல மணி நேர எபிசோடுக்கான ஷூட்டிங்கை நடத்தும் அளவுக்கு உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றும் சினிமாவிலேயே டூப் வைத்து ஓட்டி வரும் நிலையில், ரியாலிட்டி ஷோவில் அந்த வசதி இல்லாததால் தான் தற்போது ஓய்வு கருதி வெளியேறுகிறார் என்றும் கூறப்படுகிறது.

அந்த நடிகரின் அழுத்தம்

அந்த நடிகரின் அழுத்தம்

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விரல் நடிகரிடம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நிர்வாகத்து விரல் நடிகரின் தரப்பில் இருந்து ரொம்பவே அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனால், வேறு வழியில்லாமல் இந்த மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X