அந்த மாஸ் ஹீரோ பத்தின இப்படி ஒரு விஷயம் இருக்கா.. இதுக்குத்தான் அதெல்லாம் பண்றாரா?
சென்னை: பக்கத்து ஸ்டேட்டில் மாஸ் ஹீரோவின் அடுத்த படத்திற்கான ஷூட்டிங் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
வடமாநிலத்தில் நடந்தது போல ஒளிவு மறைவின்றி தினமும் ரசிகர்களை வந்து சந்தித்து செல்கிறாராம் அந்த மாஸ் ஹீரோ.
இதுக்கெல்லாம் ஒரு முக்கிய காரணமும் இருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்வதை அப்படியே கேப்ச்சர் செய்து உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

தினந்தோறும் திருவிழா
பக்கத்து ஸ்டேட்டில் மாஸ் ஹீரோ நடித்து வரும் அடுத்த படத்தின் ஷூட்டிங் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மாஸ் நடிகரை காண அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த இடத்தையே திருவிழாவாக மாற்றி வருகிறார்களாம்.

கப் சிப்
ஆனால், இதற்கு முன்பு வடமாநிலத்தில் நடந்த ஷூட்டிங்கில் கப் சிப் என இருந்த இடத்தை விட்டு வெளியே வராமல் மெளனம் காத்து வந்தார் அந்த மாஸ் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சம்பவம்
சென்னையில் உள்ள ஓரிடத்தில் படத்தின் சிறு பகுதியை படக்குழு ஷூட் செய்யும் போது தான் அந்த சம்பவம் நடந்ததாம். அந்த மாஸ் நடிகர் ஷூட்டிங்கால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதியினர் முறையிட்டு பெரிய பிரச்சனையையும் கிளப்பினர்.

மூடி மறைக்க
அந்த சம்பவத்தை மூடி மறைக்கத்தான் தற்போது இப்படி தினந்தோறும் திருவிழா நடத்தி வருகிறாராம் அந்த மாஸ் நடிகர். முன்னெப்பவும் இல்லாத அளவிற்கு திடீரென பக்கத்து ஸ்டேட்டில் பின்னே எப்படி இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் அந்த மாஸ் நடிகரின் ஹேட்டர்ஸ் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஹோட்டல்கள் எல்லாம் புக்கிங்
அந்த மாஸ் நடிகர் இருக்கும் இடத்தை சுற்றியிருக்கிற உள்ளூர் ஹோட்டல்களை எல்லாம் அந்த மாஸ் நடிகரின் ரசிக மன்ற நிர்வாகிகள் புக் செய்து, தினம் தினம் அந்த பகுதியினர் அவரை காண காத்திருப்பது போன்ற பில்டப்புகளையும் செய்து வருவதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











