கருத்தடை மாத்திரை சாப்பிட்ட நடிகை? பங்களாவில் பங்கு கேட்டு வழக்கு.. சந்திக்கு வந்த குடும்ப பிரச்சனை!
சென்னை: தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்த அந்த நடிகை, கணவரை பிரிந்து விட்டு தற்போது தனியாக வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். கணவரை பிரிந்ததற்கு முக்கிய காரணமே, குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டு கருத்தடை மாத்திரையை சாப்பிட்டதுதான் காரணம் என பிரபலம் ஒருவர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
எளிமையான குடும்பத்தை சேர்ந்த அந்த நடிகை தன்னுடைய திறமையாலும், அழகாலும் புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தபோதே, தனது காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

பிரிவுக்கு காரணம்: இருவரின் பிரிவுக்கும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிரிந்ததற்கான காரணத்தை எந்த ஒரு இடத்திலும் இருவரும் பேசியது இல்லை. தற்போது, ஒரு ஜாம்பவான் நடிகர் இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பேசி உள்ளார். அதில், வாரிசு நடிகருக்கு ஏகப்பட்ட சொத்து, பெயர் புகழ் கொண்ட வசதியான குடும்பத்தில் தான் வாழ்க்கை பட்டு போனார் அந்த பேபி நடிகை. ஆனால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டார். அதையும் அந்த வாரிசு நடிகரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அந்த பேபி நடிகையோ, கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டு உள்ளார். அந்த விஷயம் வாரிசு நடிகரின் குடும்பத்திற்கு தெரிந்து கண்டித்துள்ளனர். ஆனால், பேபி நடிகை தொடர்ந்து அதையே செய்ததால், வாரிசு நடிகரின் குடும்பத்தினர் விவாகரத்து செய்ய சொல்லிவிட்டனர்.
பங்களாவில் பங்கு: இதையடுத்து தான் வாரிசு நடிகரும் பேபி நடிகையும் மனம் ஒத்து பிரிந்துவிட்டனர். தற்போது அந்த வாரிசு நடிகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமான தனது புது மனைவியுடன் ஹைதராபாத்தில் உள்ள பங்களாவில் குடியேற அந்த வாரிசு நடிகர் திட்டம் போட்டுள்ளார். ஆனால், பேபி நடிகையோ அந்த வீடு தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு என்றும், அந்த வீட்டில் தனக்கும் பங்கு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தற்போது இந்த விவகாரம் சந்திக்கு வந்திருக்கிறது என்று அந்த ஜாம்பவான் நடிகர் வீடியோவில் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











