கல்யாண மேட்டர் காரணமாமே.. காதலருடன் சீரியஸ் மோதலில் நடிகை.. சமாதான பஞ்சாயத்தில் சினிமா தோழிகள்!
சென்னை: காதலருடன் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் அந்த நடிகை இப்போது சீரியஸ் மோதலில் இருக்கிறார் என்கிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே, கவனிக்கப்பட்டார்.
அவர் முகத்துக்கு இளைஞர்கள் மத்தியில் அவ்ளோ லைக்ஸ். விடுவார்களா சினிமாகாரர்கள்?

அதிர்ஷ்டம்தான்
ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. திடீரென டாப் ஹீரோக்கள் படங்களில் வாய்ப்பு வர, நடிகையின் மார்க்கெட் அள்ளிக்கொண்டது. இப்போது சில மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, அந்த முன்னணி டைரக்டர் படத்திலும் சின்ன வேடத்தில் நடிக்கிறார். வந்த குறுகிய காலத்திலேயே இப்படி வாய்ப்பு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்தான் என்கிறார்கள்.

லைட்டா பொறாமை
நடிகையின் கேரியர் கிராஃப், இப்படி திடீரென உயர்ந்ததைக் கண்டு மற்ற நடிகைகளுக்குப் 'லைட்டா பொறாமை' என்கிறார்கள். இதற்கிடையே நடிகர் ஒருவருடன் நடிகைக்கு காதல் என்றும் சில நடிகர்கள், நடிகையை பின் தொடர்வதாகவும் வழக்கம் போல காஸிப்ஸ் பரவ, நடிகை அப்செட் ஆனார். பிறகு வேறு வழியே இல்லாமல், நான் ஏற்கனவே காதல்லதான் இருக்கிறேன் என்றார்.

காஸிப் கதைகள்
பிறகும் விடாமல் தொடர்ந்தது காஸிப் கதைகள். ஒரு கட்டத்தில் வெறுத்துபோய், இதுதான்யா நான் லவ் பண்ற ஆளு, சீக்கிரம் கல்யாணம் பண்ண போறோம் என்று அறிவித்த பிறகுதான் அமைதியானது, கோடம்பாக்கத்தின் காஸிப் காதுகள். இந்நிலையில், ஊடல் காரணமாக, நடிகையின் காதல், அடிக்கடி மோதலில் இருக்கிறது என்கிறார்கள்.

கவலைப்படுகிறார்கள்
இந்த மோதலை, தனது சக சினிமா தோழிகளுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறாராம் நடிகை. காலம் போற போக்குல இப்பவே இப்படி மோதிக்கிட்டு இருந்தா, கல்யாணத்துக்குப் பிறகு எப்படி இருக்க போறாங்களோ? என்று கவலைப் படுகிறார்களாம் சக தோழிகள். இதுபற்றி அவரிடமும் சொல்லி இருக்கிறார்களாம்.

செல்ல மோதலா?
ஆனால், மோதல்தான் விட்டபாடில்லை என்கிறார்கள். இப்போது இருவருக்கும் மீண்டும் மோதலாம். இது செல்ல மோதலா? சீரியஸ் மோதலா என்பது தெரியாத சக தோழிகள் சமாதானம் செய்துகொண்டிருக்கிறார்களாம். ஆனால் இது சீரியஸ் மோதல்தான் என்கிறார்கள். அதாவது நடிகை வீட்டில், கல்யாண மேட்டரை எடுக்க, தள்ளி போடலாம் என்கிறாராம் காதலர். இதுதான் மோதலுக்கு காரணம் என்கிறார்கள். நிஜமா, நிஜமில்லையா?


Click it and Unblock the Notifications











