Just In
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 8 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
Don't Miss!
- News
விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தூர வச்ச படத்தை தூசி தட்டி, 5 வருஷத்துக்கு பிறகு அவசர அவசரமா ரிலீஸ் பண்ண, இதுதான் காரணமாமே!
சென்னை: அந்த சீனியர் இயக்குனர், தனது படத்தை ஐந்து வருடத்துக்குப் பிறகு ரிலீஸ் செய்வதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
அந்த இயக்குனரை ஹிமாலயாவுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள். கிராமத்து கதைகளில் கிங் என்று சொல்லப்படுபவர் அந்த இயக்கம்.
இவர் ஐந்து வருடத்துக்குப் முன் ஒரு படத்தை ஆரம்பித்தார். தனது பணக்கார நண்பர் ஒருவரின் மகளை நடிக்க வைப்பதற்காகவே ஆரம்பிக்கப்படம் இது.

சீனியர் இயக்கம்
தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்த இயக்குனர், தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரை இயக்க வைத்தார். ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், அந்த இயக்குனர் வேறு படம் கமிட் ஆனது. ஹீரோவான இசை அமைப்பாளர் படம் என்பதால், இந்த படத்தை இயக்குனரிடம் மாற்றிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு சீனியர் இயக்கம் தானே இயக்கினார் படத்தை.

வெற்றி பெறுகிறார்கள்
வெளிநாட்டில் வாழும் வயதானவரும் ஓர் இளம் பெண்ணும் தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதை எப்படி எதிர்கொண்டு, போராடி, வெற்றி பெறுகிறார்கள் என்கிற கதையை படம் இது. அமெரிக்காவில் சில நாட்கள் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது., இமாச்சலபிரதேசம் என பல இடங்களில் நடந்திருக்கிறது ஷூட்டிங்.

டைட்டில் மாற்றம்
படம் முடிந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன் திரைப்பட விழாக்களில் இது திரையிடப்பட்டது. பிறகு படத்தை அப்படியே போட்டுவிட்டார் இயக்கம். முதலில் படத்துக்கு வைக்கப்பட்ட பெயர், பக்தியை குறிப்பதாக இருந்தது. பின்னர் அதன் டைட்டிலை மாற்றி புதிதாக ஆக்கினார்கள். பிறகும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் திடீரென்று ஓரமாக வைக்கப்பட்டிருந்த படத்தை தூசி தட்டி, இப்போது ரிலீஸ் செய்கிறார்கள்.

காரணம் என்ன?
இவ்வளவு நாள் இல்லாமல், திடீரென்று இந்தப் படத்தை இப்போது அவசரம் அவசரமாக ரிலீஸ் பண்ண வேண்டிய காரணம் என்ன என்று விசாரித்தால்... காரணமில்லாமலா? என்கிறார்கள் இயக்குனருக்கு வேண்டியவர்கள். அதாவது படத்தில் நடித்துள்ள இயக்குனரின் பணக்கார நண்பர் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதற்குள் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் வீட்டில் சொல்ல, உடனடியாக களத்தில் இறங்கி விட்டாராம் இயக்கம்.