அந்தப் படத்தில் நடிப்பதற்கு.. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எல்லா ஹீரோயினும் நோ சொல்றாங்களாம்!
சென்னை: அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது இப்போது சினிமா டிரெண்ட்.
சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கையை படமாக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்

வரவேற்பைப் பெற்றன
ஏற்கனவே உருவான பல பயோபிக் படங்கள் வசூலை அள்ளித் தந்திருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இயக்குனர்களும். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பயோபிக் டிரெண்ட், பாடாய் படுத்தி வருகிறது. தற்போது கூட தலைவி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பயோபிக் படங்கள் லைனில் காத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் அந்த வீராங்கனையின் படமும்!

அகர்வால் நடிகை
அந்தப் படத்தில், பாலிவுட்டிலும் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமான சில நடிகைகளை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்தார்கள். அப்படி இருந்தால், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும் என நினைத்தார்கள். அதனால் அந்த அகர்வால் நடிகை, ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்ட சிங் நடிகை உள்பட சில ஹீரோயின்களிடம் பேசினார்களாம்.

பாலிவுட் நடிகைகள்
விஷயத்தைக் கேள்விபட்ட ஹீரோயின்கள் யோசித்துச் சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்களாம். பிறகு தெலுங்கு ஹீரோவை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வரும் அந்த ஹீரோயினிடமும் கேட்டார்களாம். அவர் தவிர மேலும் சில ஹீரோயின்களிடம் கேட்டிருக்கிறார்கள். இதில் சில பாலிவுட் நடிகைகளும் உண்டு.

தலைப்பைக் கேட்டதும்
யாருமே, கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்றேன் என்றெல்லாம் கூறவில்லை. தலைப்பைக் கேட்டதுமே யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஏனென்றால் படத்தின் ஹீரோயினாக நடிப்பவர், பளு தூக்க வேண்டும். அதையாவது டம்மியாக காண்பித்துக் கொள்ளலாம். ஆனால், உடல் எடையை அதிகரித்து, கைகால்களில் கட்ஸ் தெரியுமாறு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களாம்.

பாகுபலி நடிகை
இதுதான் இப்போது பிரச்னையாகி இருக்கிறது, பல நடிகைகளுக்கு. ஏற்கனவே பாகுபலி நடிகை, ஒரு படத்துக்காக உடல் எடையை அதிகரித்து பிறகு குறைக்க முடியாமல் அவஸ்தைப் பட்டார். அதை உதாரணத்துக்குச் சொல்லும் அந்த ஹீரோயின்கள், அந்த விளையாட்டு வீராங்கனையின் பயோபிக்கில் நடிக்கத் தயங்கி நோ சொல்லிவிட்டார்களாம். என்ன செய்வது என்று தவித்து வருகிறது அந்த தெலுங்கு தயாரிப்பு!


Click it and Unblock the Notifications











