Don't Miss!
- News
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுதான் காரணமாம்.. அந்த பிரபல ஹீரோயின் திருமணத் திட்டத்தை திடீர்னு தள்ளி வச்சிட்டாராமே!
சென்னை: அந்த பிரபல ஹீரோயின், தனது திருமணத் திட்டத்தைத் திடீரென தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அந்த மும்பை ஹீரோயினுக்கு தமிழைப் போலவே, தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது.
கணக்கு
போட்டது
சரிதான்..
இந்த
வாரம்
பிக்பாஸ்
வீட்டிலிருந்து
வெளியேறும்
போட்டியாளர்
இவர்தான்!
இதற்கிடையில் இந்தியிலும் நடித்து வருகிறார். இருந்தாலும் தமிழ், தெலுங்கில்தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்பு.

சம்பள விஷயம்
சமீபத்தில் கொரோனா பாதித்த அந்த கோதுமை நிற ஹீரோயின், சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கிலும் சில வெப் சீரிஸில் நடித்து வருகிறார். சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் அந்த நடிகைக்கு இப்போது தமிழில் அதிக வாய்ப்பில்லை.

நெகட்டிவ் கேரக்டர்
ஏற்கனவே நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. அதனால் கிடைத்த வாய்ப்புகளில் நடிக்க களமிறங்கி இருக்கிறார். ஒரு பாலிவுட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவும் சம்மதித்து இருக்கிறார். அந்த கேரக்டரில் நடிக்க அவர் ஓகே சொன்னது அந்த இயக்குனருக்கே ஆச்சரியம்தானாம்.

நெருங்கிய தோழி
சமீபத்தில் அவர் தோழிக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவரும் நடிகைதான். நெருங்கிய தோழியான அவருக்குத் திருமணம் முடிந்ததை அடுத்து, இவர் வீட்டிலும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்களாம். 'நடிச்சது போதும், கல்யாணத்தைப் பண்ணு' என்று.

உலவுகிறது பேச்சு
இந்த நடிகையும் தொழிலதிபர் ஒருவரைக் காதலித்து வருவதாக உலவுகிறது பேச்சு. இதனால் அவர் திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினரிடம் சம்மதம் சொல்லி இருந்தாராம். இடையில் திடீரென சில படம் மற்றும் வெப் சீரிஸ் வாய்ப்புகள் வந்துவிட, திருமணத் திட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டாராம்.

குடும்பம் ஓகே
இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கலாமே என்று திருமணத்தைத் தள்ளி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். கிடைக்கிற வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று நினைக்கும் அந்த நாயகியின் முடிவுக்கு குடும்பமும் சம்மதம் தெரிவித்து இருக்கிறதாம். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பது சந்தேகம்தானாம்.