எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன என்று இருக்கும் தயாரிப்பாளர்

By Siva

Recommended Video

அந்த அடல்ட் காமெடிய படத்தை எடுத்த தயாரிப்பாளரை காரி துப்பும் கோலிவுட்!- வீடியோ

சென்னை: பணம் சம்பாதிக்க இவ்வளவு தரம் குறைந்து நடந்து கொண்டுள்ளாரே என்று தயாரிப்பாளர் ஒருவரை பார்த்து கோலிவுட்காரர்கள் குமுறுகிறார்கள்.

பிரபல நடிகர்களின் உறவினரான அந்த தயாரிப்பாளர் தயாரித்துள்ள படத்தை பற்றி தான் கோலிவுட்காரர்கள் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் அதை எல்லாம் காதில் வாங்குவதாகவே இல்லை.

படத்தின் வசூல் நிலவரத்தை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார்.

கூட்டணி

கூட்டணி

முதன்முதலாக அவர் அடல்ட் படத்தை தயாரித்த போதே பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த படம் ஹிட்டானதை பார்த்த தயாரிப்பாளர் அதே இயக்குனர், நடிகரை வைத்து மீண்டும் ஒரு ஏ படத்தை தயாரித்து வெளியிட்டுவிட்டார்.

கோபம்

கோபம்

இப்படி ஆபாசமும், அருவெறுப்பும் நிறைந்த வசனங்கள், காட்சிகளை வைத்து படம் எடுத்து தான் சம்பாதிக்கணுமா என்று தயாரிப்பாளரை பலரும் நறுக்கென்று கேட்டுவிட்டனர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கே என்று கூட கூறிவிட்டனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தான் தயாரித்த படத்தை பிரபலங்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் இளசுகள் எல்லாம் படத்தை பார்த்து ஹிட்டாக்கியுள்ளதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் உள்ளார். சிறிய பட்ஜெட்டில் அடல்ட் படத்தை எடுத்து பெரிய லாபம் பார்த்து ருசி கண்டுவிட்டார்.

பிஎம்டபுள்யூ

பிஎம்டபுள்யூ

முதல் அடல்ட் படத்தை வெற்றியாக்கியதற்காக இயக்குனருக்கு ஆடி கார் வாங்கிக் கொடுத்தார் தயாரிப்பாளர். தற்போது என்ன பி.எம்.டபுள்.யூ. கார் வாங்கிக் கொடுப்பாரோ? ஹிட் கொடுக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கிறாரே தயாரிப்பாளர் இதை எல்லாம் பார்த்து அந்த சீனியர் உறவுக்காரர் கண்டிக்க மாட்டாரா என்று சிலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X