தன் வாழ்க்கையை கெடுத்த திருமணமான நடிகர்.. அவரை போலவே இவரும் திடீர் அந்தர் பல்டி.. இதுதான் காரணம்?
சென்னை: தனது வாழ்க்கையை கெடுத்த திருமணமான நடிகர் குறித்து நடிகை திடீரென அந்தர் பல்டி அடித்ததற்கு கூட காரணம் தொடர் மிரட்டல்கள்தான் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகி நடிகையான அவர், உத்தம நடிகரின் படத்தில் தவறாமல் இடம் பிடித்து வந்தார். அதோடு முன்னணி இசைப்பாளருடனும் நெருக்கமாக இருந்தார்.
வயதுக்கேற்ற சகவாசம் இல்லை என விமர்சனத்துக்குள்ளானார் நடிகை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, திடீரென காணாமல் போனார்.

சீரழிக்கப்பட்டேன்
சமீபத்தில் மீண்டும் பேக் டூ ஃபார்மான அந்த நடிகை, தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக திருமணம் ஆன ஒரு நபரால் தான் சீரழிக்கப்பட்டதை தடாலடியாக போட்டுடைத்து பரபரப்பை கிளப்பினார்.

வாரிசின் பெயர்
நடிகை இந்த விஷயத்தை வெளியிட்டதில் இருந்து அந்த நடிகர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டனர். அவரா இருக்குமோ இவரா இருக்குமோ என அரசியல் வாரிசின் பெயரெல்லாம் அடிப்பட்டது.

வெளியாகவில்லை
அப்போதுதான் நடிகை தனது வாழ்க்கையை சீரழித்தவர் குறித்து தனது புத்தகத்தில் கூறியிருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை.

அந்தர் பல்டி
அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட நடிகரின் மிரட்டல்தான் என கூறப்பட்டது. இந்நிலையில் அண்மையில் நான் அந்த விஷயத்தை பொதுவெளியில் பேசியதுதான் தவறு என அந்தர் பல்டி அடித்துள்ளார் நடிகை.

இதுக்கும் காரணம்
இதற்கு காரணம் தொடர்ந்து விடுக்கப்பட்ட மிரட்டல்கள்தான் என கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து பேசினால் வெளியே தலை காட்ட முடியாது என்று மிரட்டல்கள் வருகிறதாம்.

அந்த நடிகையும்..
இதனால்தான் ரசிகர்கள் அனுமானித்த நடிகர் அவர் இல்லை என பேசியுள்ளார் நடிகை. சமீபத்தில் சர்ச்சை நடிகைக் கூட தான் கூறியதாக வெளியான தகவல் பொய்யென பிரஸ் மீட் கொடுத்தார்.

என்ன நடந்திருக்கிறது
அப்போதே மிரட்டல்கள்தான் நடிகையின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என பேச்சு எழுந்தது. இப்போது பாடகி நடிகையும் மறுத்திருப்பதற்கு பின்னணியில் என்னவோ நடந்திருக்கிறது என்று கூறுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











