சென்னை: மூன்று எழுத்து படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய மூன்று நடிகைகள் ஃபீல் பண்ணுகிறார்களாம்.
புதுமுக இயக்குனரின் மூன்று எழுத்து படம் ஹிட்டாகியுள்ளது. அந்த படத்தை பார்த்து சீனியர் நடிகை ஒருவர் கடுப்பானாலும் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த படத்தில் நடிக்க சர்ச்சை நடிகை, சமத்து நடிகை, வாரிசு நடிகை ஆகியோரை அணுகினாராம் இயக்குனர். உடல் எடையை குறைக்க வேண்டுமா, கொடிய நோய் பாதித்தவளாக நடிக்க வேண்டுமா அது எல்லாம் முடியாது, எங்க இமேஜ் டேமேஜாகிவிடும் என்று நடிகைகள் படத்தில் நடிக்க மறுத்துள்ளனர்.
அலைந்து திரிந்த இயக்குனர் இறுதியில் தி நடிகையை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து ஹிட்டும் கொடுத்துவிட்டார். படம் ஹிட்டாகி அந்த நடிகைக்கு செம பெயரும், புகழும் கிடைத்துள்ளது.
இதை பார்த்த அந்த 3 நடிகைகள் அய்யோ, நல்ல பட வாய்ப்பை விட்டுட்டோமே என்று தற்போது ஃபீல் பண்ணுகிறார்களாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.