ஸ்டார் நடிகரின் மகள்.. ஒல்லி நடிகருடன் தொடர்பு.. குழியில் தள்ளிய 3 எழுத்து நடிகை!
சென்னை: அந்த சாக்லேட் பாய் நடிகரையும் பெரிய தயாரிப்பாளரின் மகளையும் கோர்த்துவிட்டதே அந்த 3 எழுத்து நடிகை தான் என்றும், ஒல்லி நடிகர் தான் நன்றாக இருந்த குடும்பத்தை பிரிந்து விட்டார் என சினிமா பிரபலர் நபர் ஒருவர் பேசியிருக்கும் தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கோர்த்துவிட்ட நடிகை: கோலிவுட்டில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் அந்த சாக்லேட் பாய் நடிகரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து மீண்டும் கிசுகிசுக்கள் வெடித்துள்ளன. ஆரம்பத்தில் தயாரிப்பாளரின் மகளிடம் நடிகருக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை. ஆனால், பிரபல 3 எழுத்து நடிகை தான் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருந்தார். வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல, தொடர்ந்து இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளார்.

மிரட்டி திருமணம்: நடிகரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அவரது பெற்றோர் கவனித்துவிட்டு, அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது என்று நடிகரை எச்சரித்தனர். அதே நேரத்தில், அந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஒரு ஸ்டார் நடிகரின் இளைய மகளுடன் திருமணம் நடத்தும் பேச்சுவார்த்தையும் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அந்த நேரத்தில் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனால் தயாரிப்பாளரின் மகளை நடிகர் சில காலம் புறக்கணித்து வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த தயாரிப்பாளரின் மகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், நடிகர் மனம் மாறி திருமணம் செய்து கொண்டார்.
ஒல்லி நடிகருடன் தொடர்பா: திருமணத்திற்கு பிறகு சாக்லேட் நடிகர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். ஆனால் மனைவி கொடுத்த டார்ச்சரா, மனைவியின் கட்டுப்பாட்டால் மாமியார் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிகர் நிலை உருவானது. அதுமட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் தயாரிப்பாளரின் மகள், நண்பர்களுடன், நைட் பார்ட்டி, வெளிநாட்டு டூர் என வீடு தங்காமல் எப்போதும் வெளியிலேயே இருப்பாராம். நடிகர் சம்பாதித்த பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து வந்துள்ளார். இதுவும் நடிகருக்கு திருமண வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், பிரபல பாடகி ஒருவர் கூட ஒல்லி நடிகருடனும் அந்த நடிகரின் மனைவி நைட் பார்ட்டிகளில் அடித்த லூட்டியை நேரில் பார்த்திருக்கிறேன் என்று பேசி இருந்தார். ஆனால், இத்தனை குறைகளையும் கூறிய அந்த சாக்லேட் பாய் நடிகர், தனது மனைவி வேறு நடிகருடன் தொடர்பில் இருந்ததாக மட்டும் ஒருபோதும் சொல்லவில்லைவே இல்லை என அந்த சினிமா பிரபலம் பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications