எல்லாம் இவர் சுட்ட இட்லி தானாம்.. கான் நடிகர் இன்னும் கன்ஃபார்ம் பண்ணலயாம்!
கான் நடிகரை வைத்து படம் பண்ண போவதாக வந்த தகவல் எல்லாம் மூன்று எழுத்து இயக்குநர் அந்த விளையாட்டு படத்திற்காக சுட்ட வியாபார இட்லியாம். கான் நடிகர் இன்னும் கதை கேட்டு கன்ஃபார்ம் பண்ணவே இல்லையாம்.
Recommended Video
சென்னை: மாஸ் நடிகரை வைத்து விளையாட்டு படத்தை இயக்கியுள்ள அந்த மூன்று எழுத்து இயக்குநர், அடுத்ததாக கான் நடிகரை வைத்து படம் இயக்கப்போவதாக ஏகபோகமாக செய்திகள் பரவின.
ஆனால், இதுவரை அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விளையாட்டு படத்தின் வியாபார யுக்திக்காக அந்த இயக்குநர் சுட்ட இட்லி தான் என்ற பேச்சு கோலிவுட்டில் கசியத் தொடங்கியுள்ளது.

எல்லாம் வியாபாரம்
அந்த பிரம்மாண்ட இயக்குநரிடம் இருந்த காலத்தில் இருந்தே வியாபாரத்திற்காக பல பில்டப் செய்திகளை பரப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தவர் அந்த மூன்று எழுத்து இயக்குநர். தற்போது, தனது படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகமாகி போய் விட்டதால், கான் நடிகரை இயக்கப்போவதாக மிகப்பெரிய இட்லியாக சுட்டுள்ளாராம் அந்த இயக்குநர்.

மாட்டிக்கிட்ட பங்கு
மூன்று எழுத்து இயக்குநர் சுட்ட இட்லியை நம்பிய வடமாநில செய்தி நிறுவனம் இந்த கூட்டணி உறுதியானது என அதிகாரப்பூர்வமாகவே செய்தியை வெளியிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டது. விஷயம் விஸ்வரூபம் எடுக்க எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று போட்டுடைத்து விட்டாராம் அந்த கான் நடிகர்.

எஸ்கேப்
படம் ரிலீசாகும் நேரத்தில் தனது ராஜ தந்திரம் அனைத்தும் அம்பலமாகி விட்டதே என்பதை அறிந்த அந்த மூன்று எழுத்து இயக்குநர் இதுகுறித்து இப்போதைக்கு எந்த ஒரு சத்தமும் காட்ட வேண்டாம் என்று இந்த விவாகரம் குறித்து அறியாதவர் போல கண்டும் காணாமல் எஸ்கேப் ஆகியுள்ளாராம்.

புலம்பும் அக்கா
அந்த இசை நிகழ்ச்சியில் மாஸ் நாயகன் பேசிய பேச்சில், இப்போது காலை காட்சிகளும் ரத்தாகின. அதே போல படத்தில் இடம்பெற்ற பல அரசியல் வசனங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுத்தான் சான்றிதழே வாங்கியுள்ளார்களாம். அந்த இயக்குநர் சொன்ன பட்ஜெட்டை விட இஷ்டத்துக்கு பல கோடிகளை அதிகரித்து விட்டுள்ள நிலையில், போட்ட அசலாவது கைக்கு வருமா என்ற குழப்பத்தில் அந்த பாசமான அக்கா புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











