இங்கே கேட்ட சம்பளம் கிடைக்கலையாம்.. துபாயில் தூண்டில் போட்ட டாப் நடிகர்?.. அட செம விவரமா இருக்காரே

By Staff

சென்னை: தமிழ் சினிமாவின் டயர் 1 ஹீரோக்களில் அவரும் ஒருவர். கடந்த வருடத்தில் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகின. ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே க்ளிக் ஆகவில்லை. இதனால் அடுத்த படத்துக்கு அவர் கேட்கும் சம்பளத்தை எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதனால் என்ன செய்வதென்று யோசித்த அவர்; துபாயில் பழக்கமான ஒருவரிடம் தூண்டில் போட்டதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக கடந்த பல வருடங்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அவர். ஹிட்டுகள், ஃப்ளாப்புகள் என மாறி மாறி சந்தித்த அவருக்கென்று பல லட்சம் பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் நடிக்க கூட வேண்டாம் திரையில் தோன்றினாலே தங்களுக்கு திருவிழாதான் என்கிற மனப்பான்மையில் இருப்பவர்கள் அவரது ரசிகர்கள். முக்கியமாக நடிகரின் தனிப்பட்ட குணத்தை ரசிப்பதற்காகவே பெரும் கூட்டம் ஒன்று உண்டு.

ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள்: பொதுவாக ரொம்பவே ஸ்லோவாக படங்களில் நடிப்பவர்தான் அந்த நடிகர். ஆனால் இப்போது அவரது கவனம் திரைத்துறை மட்டுமின்றி இன்னொரு துறையிலும் பந்தயம் அடிக்க சென்றிருக்கிறது. எனவே தனக்கு இருக்கும் சினிமா கமிட்மென்ட்டுகளை வேக வேகமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அது ஒட்டுமொத்த திரைத்துறையினரிடமும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது.

Tier-1 Tamil Star Struggles to Find Producer After Back-to-Back Flops

எதுவும் ஹிட் இல்லை: அதேசமயம் இவ்வளவு வேகமாக நடித்திருக்கிறாரே அந்தப் படங்கள் எல்லாம் ஹிட்டாகுமா என்ற சந்தேகமும் எழுந்தது. சந்தேகப்பட்டபடியே ஒரு படமும் க்ளிக் ஆகவில்லை. ஆனாலும் 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தன. அதில் எவ்வளவு உண்மை என்று அவர்களுக்கே தெரியும். இது ஒருபக்கம் இருக்க இன்னொரு துறையில் முழு கவனமும் செலுத்துவதால் இன்னும் சில வருடங்கள் மட்டும்தான் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

கேட்ட சம்பளம் இல்லை: சூழல் இப்படி இருக்க இளம் இயக்குநருடன் அடுத்த படத்தில் கூட்டணி வைத்திருக்கிறார். கடந்த வருடம் பெற்ற தோல்விக்கு இந்த வருடம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவோடு இருக்கிறாராம். ஆனால் இயக்குநர் கிடைத்துவிட்டாலும் தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. ஏனெனில் நடிகர் கேட்கும் சம்பள தொகை 180 கோடி ரூபாயாம். ஒரு படமும் ஓடவில்லை; என்ன தைரியத்தில் இப்படி கேட்கிறார் என தயாரிப்பாளர்கள் எல்லாம் தலை தெறிக்க ஓடிவிட்டார்களாம்.

தூண்டில் போட்ட நடிகர்: இதை பார்த்து அதிர்ச்சியான நடிகர்; இனிமேல் இங்கே நாம் நினைத்தது நடக்காது என்று முடிவெடுத்து துபாயில் தனக்கு பழக்கமானவரிடம் தூண்டில் போட்டிருக்கிறார்.அந்த நபர் வெயிட்டான பார்ட்டி என்பதால் படம் செய்யலாம் என்ற மைண்ட் செட்டில் இருந்திருக்கிறார். முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போது தனக்கு 170 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும், லாபத்திலும் பங்கு வேண்டும் என்று கேட்க; இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று அந்த நபரும் முதல் சிட்டிங்கோடு மூட்டையை கட்டிவிட்டாராம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகிறாராம் டாப் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X