மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சாம்.. மீண்டும் கதையில் கரெக்ஷன்.. கதறவிடும் டாப் நடிகர்!
சென்னை: டூர் முடிந்து நடிகர் மீண்டும் ஊருக்குத் திரும்பி விட்டார் உடனடியாக படத்தின் வேலைகளை ஆரம்பித்து விடலாம் என நினைத்துக் கொண்டிருந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய இடியை தலையில் இறக்கி விட்டாராம் டாப் நடிகர்.
சென்னைக்குத் திரும்பிய நடிகர் தனது சொந்த வேலைகள் மற்றும் விளம்பர வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு ஒரு வழியாக இயக்குநரை சந்தித்து இருக்கிறார்.

ஆனால், இன்னும் சிறிது காலம் தனக்கு தேவைப்படும் நிலையில், கதையில் சில கரெக்ஷன் இருக்கு எனக்கூறி நடிகர் காண்டாக்கி விட்டார் என பரபரப்பு பேச்சுக்கள் பற்றிக் கொண்டு எரிகின்றன.
தயாரிப்பாளர் ரொம்ப பொறுமை: பல கோடி வருமானத்தை அந்த நடிகருடன் இணைந்து பணியாற்றப் போகிறோம் என்கிற அறிவிப்பை வைத்தே பார்த்து விட்ட தயாரிப்பாளர் அந்த காசுக்காக ரொம்பவே அமைதி காத்து வருகிறாராம்.
மற்ற பட வேலைகள் எல்லாம் சொன்ன நேரத்தில் ஷார்ப்பாக ஆரம்பித்து அதிக நேரத்தை வீணடிக்காமல், காசை கரியாக்காமல் கரெக்ட்டாக முடித்து வரும் நிலையில், இந்த நடிகரின் படம் மட்டும் இன்னும் செல்ஃபே எடுக்காமல் ஆரம்பித்த இடத்திலேயே அப்படியே இருப்பது தயாரிப்பாளர் பொறுமையை ரொம்பவே சோதித்துள்ளதாக கூறுகின்றனர்.
கடுப்பான இயக்குநர்: எப்படியாவது முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி நாமும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விட மாட்டோமா என்கிற நினைப்பில் பல ஆண்டுகளாக தவம் கிடந்து வந்த அந்த இயக்குநர் டாப் நடிகர் படம் கிடைத்து விட்டதே என்கிற சந்தோஷத்தில் குதித்த காலம் எல்லாம் மலையேறி போய் விட்டதாம்.
இப்போ எப்போடா படத்தை ஆரம்பித்து, முடித்து விட்டு பெரிய கும்பிடு போடுவோம் என்கிற மனநிலையில், இயக்குநர் இருந்து வந்த நிலையில், கடைசியாக இன்னொரு கரெக்ஷனையும் சொல்லி இயக்குநரையும் கடுப்பாக்கி உள்ளாராம் அந்த நடிகர் என்கிற பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் பகீரை கிளப்பி உள்ளன.
இன்னும் ஒரு மாசம்: நடிகருக்கு இன்னும் சில பர்சனல் வேலைகள் இருப்பதாகவும் அதை முடித்துக் கொண்டு வர இன்னும் ஒரு மாத காலம் டைம் எடுக்கும் என்பதால், படத்தை தொடங்கும் பணிகள் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படியே ஒரு மாசம் ஒரு மாசம்னு சொல்லி இந்த ஒரு வருஷத்தையே காலி பண்ணிடுவாரு போல என தயாரிப்பு தரப்பு நினைத்து வேதனையில் இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











