நள்ளிரவில் நடிகை செய்த சேட்டை.. வெறும் ஏஐ போட்டோ.. காலைச் சுற்றிய பாம்பு கொத்தாமல் விடாது!

சென்னை: திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே அந்த டாப் நடிகருக்கும், அவருடன் பல ஹிட் படங்களில் ஜோடி போட்டு நடித்த முன்னணி நடிகைக்கும் இடையே இருக்கும் ரிலேஷன்ஷிப் தான் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அந்த நடிகர் தற்போது மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய உயரத்தை எட்டி, அவரது சமீபத்திய மாஸ் பேச்சும் விளக்கமும் இணையத்தில் ஒட்டுமொத்த மக்களால் கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த அரசியல் வெற்றியை ட்ரெண்ட் செய்து வந்த வேளையில், அந்த முன்னணி நடிகை நள்ளிரவில் திடீரென வெளியிட்ட ஒரு போட்டோ, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடும் மனவேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

இது ஒரு மனநோய்: அந்தப் புகைப்படத்தை வைத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் அந்த டாப் ஜோடியை வறுத்தெடுத்து ட்ரோல் செய்து வரும் நிலையில், இதுகுறித்து சினிமா பிரபலம் ஒருவர் உடைத்துப் பேசி உள்ளார். என்னை பொறுத்தவரை சமூக வலைத்தளத்தில் வெளியான அந்தப் புகைப்படத்தை நான் ஒரு ஏஐ போட்டோ என்றுதான் சொல்வேன். ஏனென்றால் அந்தப் போட்டோவை உற்றுப் பார்க்கும்போது அந்த விஷயம் நன்றாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல், அன்னைக்கு வாழ்த்துச் சொல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் பேசி முடித்த பிறகு, அடுத்த நாள் நள்ளிரவில் வாழ்த்துச் சொல்கிறார் என்றால் அவரது மனநிலை என்ன? தான் வாழ்த்து சொல்கிறேனா இல்லையா என்பதை ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் பேச வைத்து வேடிக்கை பார்த்துவிட்டு, அதன் பிறகு இந்த போட்டோவைப் பதிவிடுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது இது ஒரு விதமான மனநோய் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

Tamil cinema Gossip

காலைச் சுற்றிய பாம்பு: அந்த நடிகர் பொதுவெளியில் சாதித்த விஷயங்களை மக்கள் அனைவரும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த நடிகை இப்படிப் பொதுவெளியில் புகைப்படத்தைப் பகிர்ந்தது மிகப்பெரிய தவறு. அந்த நடிகர் இந்த உயரிய பொறுப்புக்கு வந்த பிறகு, நெருக்கமானவர்கள் அறிவுரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அட்வைஸ்களை ஏற்றுக்கொண்டு அவரும் அந்த நடிகையிடமிருந்து விலகும் முடிவை எடுத்துக்கிறார். ஆனால், அந்த நடிகை காலை சுற்றிய பாம்பாக இருக்கிறார்.

கொத்தாமல் விடாது: அந்த நடிகைக்கு உண்மையிலேயே அந்த நடிகரின் வளர்ச்சியின் மீது அக்கறையும், அன்பும், பாசமும் இருந்திருந்தால், இந்த ரிலேஷன்ஷிப்பை அவரே முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிப் போயிருப்பார். நம்முடைய ரிலேஷன்ஷிப்பால் அவருக்கு இவ்வளவு பெரிய சங்கடமும், கெட்ட பெயரும் வருகிறது என்னும்போது ஒரு பெண் அவராகவே அந்த உறவை முறிப்பதுதான் உண்மையான அன்புக்கு அடையாளம். ஆனால், அதைவிட்டுவிட்டு இப்படிப்பட்ட சேட்டைகளைச் செய்து பொதுவெளியில் சீண்டிப் பார்ப்பது ஒரு விதமான ஸ்டேடிசம். சுருக்கமாகச் சொன்னால், அந்த நடிகை அந்த நடிகரின் காலைச் சுற்றிய பாம்பு,அந்த பாம்பு கொத்தாமல் விடாது. அதில் இருந்து அந்த நடிகர் விடுபடுவது ரொம்பவே கஷ்டம் என அந்த சினிமா பிரபலம் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X