நடிப்புக்கு ஓய்வெல்லாம் சும்மா பித்தலாட்டமாம்.. அடுத்த திருமணத்துக்கு தயாராகி விட்டாராம் அந்த நடிகர்
மும்பை: ஆண்டுக்கு அத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்களில் அந்த குமார் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படம் ஓடாத நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நடிகர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னணியில் பெரிய பிளானே இருக்கு என பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன.
உலக சினிமாவையே தனது நடிப்பால் திரும்பி பார்க்க வைத்த அந்த நடிகர் ஏன் அதற்குள் இப்படியொரு முடிவை எடுத்தார் என திரையுலகிலேயே பலரும் குழம்பிப் போய் இருக்கும் நிலையில், அடுத்த திருமணத்தை சைலன்ட்டாக அந்த நடிகர் செய்யப் போகிறார் என்று பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ஏற்கனவே நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார் அந்த நடிகர் எனக் கூறப்பட்ட நிலையில், விரைவிலேயே திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டு ஃபிளாப்
நடிகரின் பல படங்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்து வந்த நிலையில், திடீரென அவர் நடித்த கடைசி இரண்டு படங்களுமே படு தோல்வியை சந்தித்தது அவரை பெரும் கடனாளியாக மாற்றி உள்ளது என்றும் கூறுகின்றனர். பழைய படி தெளிவான சிந்தனையில் நடிகர் கதைகளை தேர்வு செய்யாததே அவரது தோல்விக்கு காரணம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருமணமும் விவாகரத்தும்
அடிக்கடி திருமணம் செய்வதும் அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்தும் விவாகரத்து செய்வதையும் வழக்கமாக கொண்டு இருக்கிறார் அந்த நடிகர். இந்த விஷயத்தில் அவரது பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது கூட சமீபத்தில் வெளியான காதல் படம் கவிழ்ந்து விடவும் அதுதான் காரணம் என்று பேசிக் கொள்கின்றனர்.

ரெஸ்ட் எடுக்கப்போறேன்
நடிகர் மீது அவரது ரசிகர்களே திடீரென எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தது அவரை ரொம்பவே பாதித்து விட்டது. மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த படம் எப்படியும் ஓடி விடும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இனிமேல் தான் நடிக்கவே போறது இல்லை என்கிற நிலைக்கே வந்து விட்டார் அந்த பெரிய நடிகர்.

என்ன காரணம்
ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததும் திடீரென அந்த நடிகர் இப்படியொரு ஓய்வு அறிவிப்பை அறிவிப்பதற்கு இதுமட்டும் தான் காரணம் என நம்ப முடியவில்லையே என சிலர் தோண்ட ஆரம்பித்த நிலையில், திடுக்கிடும் சில தகவல்கள் கசிந்துள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்த திருமணம்
அந்த நடிகர் குழந்தை மற்றும் குடும்பத்துடன் கொஞ்ச காலம் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாக சொன்ன நிலையில், விவாகரத்துக்கு பின்னர் மறுபடியும் குடும்பம் என்றால் அடுத்த திருமணத்திற்கு சார் ரெடியாகி விட்டாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. சீக்கிரமே இதுதொடர்பான சந்தோஷமான செய்தியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











