இதெல்லாம் தேவையில்லாத ஆணி.. அப்படியே தூக்கிடுங்க.. இயக்குநருக்கு டாப் நடிகர் திடீர் அட்வைஸ்!

சென்னை: அடுத்த படத்தில் எப்படியாவது தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என நினைத்த இயக்குநர், நெகட்டிவ் ரோல் கொடுத்தால் தான் டாப் நடிகர் படம் ஓடும் என நினைத்துக் கொண்டு அவருக்கு அப்படியொரு மிரட்டலான கதாபாத்திரத்தை ரெடி செய்து சம்மதமும் வாங்கி விட்டார்.

சமீபத்தில் வேர்ல்ட் நடிகர் டிரைலரில் கெட்ட வார்த்தை பேசியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஃபயர் விடுவதை நோட் செய்த அந்த இயக்குநர் அப்படியே தனது ஸ்க்ரிப்ட் பேப்பரிலும் இஷ்டத்துக்கு ஆபாச வசனங்களை அள்ளித் தெளித்து இருந்தாராம்.

அதை பார்த்த டாப் நடிகர் இயக்குநரை அழைத்து இதையெல்லாம் தூக்கிடுங்க தேவையில்லாத ஆணின்னு சொல்லி பயங்கரமாக நோஸ் கட் செய்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

தோல்வி தந்த பயம்

தோல்வி தந்த பயம்

திறமையான இயக்குநர் என பெயரெடுத்து வந்த அந்த இயக்குநர் எப்போ டாப் நடிகர் படங்களை இயக்க வந்தாரோ அப்போதிலிருந்தே ஏகப்பட்ட தலையீடுகள் இருந்துக் கொண்டே இருப்பதால் முழுமையான அர்ப்பணிப்புடன் அவரால் படங்களில் பணியாற்ற முடியவில்லை என்கின்றனர். மேலும், தோல்வி பயம் வேறு தற்போது ஆட்கொண்டதால் யார் எதை மாற்ற சொன்னாலும், மாற்றி படம் எடுத்து வருகிறாராம்.

ஆபாச வசனங்கள்

ஆபாச வசனங்கள்

பாசிட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கே கெட்ட வார்த்தைகள் எழுதி கொடுக்கும் சூழலில் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றால் சொல்லவா வேண்டும், அரை டஜனுக்கும் அதிகமான சீன்களில் நடிகர் படு ஆபாசமாக கெட்ட வார்த்தைகளை சகட்டு மேனிக்கு பேச வேண்டும் என ஸ்க்ரிப்ட் பேப்பரில் இயக்குநர் எழுதி நடிகரிடம் கொடுத்துள்ளார்.

தேவையில்லாத ஆணி

தேவையில்லாத ஆணி

ஆனால், அத்தனை ஆபாச வார்த்தைகள் அடுக்கி இருந்ததை பார்த்து அப்செட் ஆகி விட்டாராம் அந்த டாப் நடிகர். மேலும், இயக்குநரை தனியாக அழைத்து, இதெல்லாம் தேவையில்லாத ஆணி அத்தனையையும் நீக்கிடுங்க என ஸ்ட்ரிக்ட்டான ஆர்டர் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிப்பில் மிரட்டணும்

நடிப்பில் மிரட்டணும்

கெட்ட வார்த்தைகளை பேசி நானும் நடித்திருக்கிறேன். ஆனால், தற்போது அதெல்லாம் தவறு என நினைக்கிறேன். வில்லத்தனத்தை வார்த்தைகளால் அல்ல நடிப்பில் காட்டி மிரட்டணும் அந்த மாதிரி சீனை மாற்றுங்க என இயக்குநருக்கு ஆர்டர் போட்டு இருக்கிறாராம் டாப் இயக்குநர். இளைஞர்களை கவர இப்படி ஏதாவது ஜிம்னாஸ்டிக் செய்தால் தானே உண்டு என இயக்குநரும் புலம்பி வருகிறாராம்.

மியூட் போட்டுருவாங்க

மியூட் போட்டுருவாங்க

நடிகர் தேவையில்லாத ஆணி என சொன்னதுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறாராம். நாம் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை போட்டு படம் முழுக்க பேசினாலும், கடைசியில் சென்சார் அவற்றை மியூட் போட்டு விடுவார்கள். அதற்கு பதிலாக வேறு விதமான வசனங்களை வைத்து விட்டால், ஊமைப் படமாக நம்முடைய படம் மாற வேண்டிய நிலைமை வராது என்றும் விளக்கம் அளிக்க இயக்குநரும் நடிகரின் அட்வைஸை ஏற்று படம் எடுத்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X