அப்டேட் எல்லாம் வேண்டாம்.. முதல்ல படத்தை முடிப்போம்.. டாப் நடிகர் போட்ட கண்டிஷன்.. ஏன் தெரியுமா?
சென்னை: நண்பர் படம் வெளியாக உள்ள நிலையில், டாப் நடிகர் தனது படத்தின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்டையை கலாய்த்திருக்க நல்ல வாய்ப்பு அமைந்தும் அமைதி காத்து வருகிறாரே ஏன் என நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தம் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டினாலும், அடக்கி வாசிக்கச் சொல்லி டாப் நடிகர் தான் உத்தரவு போட்டுள்ளாராம்.

மேலும், படத்தை பற்றிய எந்தவொரு விஷயத்தையும் படக்குழுவினர் கசிய விடக் கூடாது என்கிற ஸ்ட்ரிக்ட் ஆர்டரையும் போட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
அறிவிப்பே வேண்டாம்: டாப் நடிகரின் படம் பல மாதங்கள் தாமதம் ஆன நிலையில், சமீபத்தில் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையிலும், எந்தவொரு அறிவிப்பையும் கொண்டாட்டத்தையும் கொண்டாட வேண்டாம் என தயாரிப்பு தரப்புக்கே கடிவாளம் போட்டுள்ளார் டாப் நடிகர் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
சரியான சான்ஸ்: போட்டி நடிகரின் படம் வெளியாக உள்ள நேரத்தில் தனது படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு தனது ரசிகர்களை எளிதில் நடிகர் கொம்பு சீவி விட்டிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் இருக்க ஒரு அட்டகாசமான காரணம் இருப்பதாக கூறுகின்றனர்.
என்ன காரணம்?: தேவையில்லாமல் ரசிகர்கள் சண்டையை தவிர்க்கவும், தனது ரசிகர்கள் தங்கள் பொழைப்பை பார்த்து செல்ல வேண்டும் என்றும் பல மாதங்கள் ஒரு படத்துக்காக அதை பற்றிய ஹைப்புகளுடன் நெகட்டிவிட்டியை பரப்பிக் கொண்டு இருக்காமல் படம் ரெடியான நிலையில், வெளியிடும் போது மட்டும் எதிர்பார்ப்பை எகிற விட்டால் போதும் என்கிற மன நிலைக்கு டாப் நடிகர் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
ரசிகர்களுக்காக: பல பிரச்சனை இளம் ரசிகர்களை கெடுத்து வரும் நிலையில், அவர்களை நல்வழிப்படுத்த நினைத்து தான் டாப் நடிகர் இப்படியொரு முடிவுடன் அமைதியாக வேலையை மட்டும் பார்த்து வருகிறாராம். ரசிகர்களின் நலனில் அக்கறை செலுத்தும் முயற்சியில் தான் அப்டேட் அலப்பறைகளை ஆஃப் செய்து வைத்திருப்பதாகவும், இனிமேல் போட்டி ரிலீஸ் செய்து ரசிகர்களின் போட்டியை உருவ வேண்டாம் என்கிற திடமான முடிவுக்கே வந்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











