Just In
- 14 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 58 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Sports
33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை!
- Automobiles
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- Education
ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தள்ளிப் போகும் டாப் நடிகரின் படம்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பிரைட் நடிகர்!
சென்னை: டாப் நடிகரின் படத்தின் ஷூட்டிங் ஆமை வேகத்தில் செல்வதால், திட்டமிட்டபடி அந்த பண்டிகை தினத்துக்கு ரிலீஸ் ஆகாது என்ற தகவல் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பிரைட் நடிகர், தனது அடுத்த படத்தின் மொத்த அறிவிப்பையும் இறக்கி உள்ளார்.
டாப் நடிகரின் படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படியொரு அப்டேட் கிடைத்திருப்பது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காயம்
ஷூட்டிங்கின் போது விபத்துகள் நடப்பது சர்வ சாதாரணமான ஒன்று தான். ஆனால், பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால், அது அந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் மொத்த திட்டத்தையும் பெரிதாக பாதித்து விடும். சின்ன விபத்து தான் என்று சொன்னாலும், தொடர்ந்து நடிக்க ஓய்வு தேவை படுவதால், ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஷுட்டிங் விபத்து.. தன்னை கைய காட்டிட கூடாதுன்னுதான் அவர் முந்தினாராம்.. ஆனாலும் விவகாரமாயிடுச்சாம்!

மெதுவா
சில வாரங்கள் ஓய்வு எடுக்க சொல்லி மருத்துவர்கள் அந்த டாப் நடிகருக்கு அறிவுரை வழங்கியுள்ள நிலையில், படத்தின் மத்த காட்சிகள் படமாக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும், விறு விறுப்பாக ஷூட்டிங் செல்லாமல், சற்று மெதுவாகவே நகர்கின்றதாம். இதனால், தான் படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் கொடுக்க முடியாமல் படக்குழு தவித்து வருகிறது.

பண்டிகை நாளில் இல்லை
இதனால், திட்டமிட்டபடி அந்த பெரிய பண்டிகை நாளில் டாப் நடிகரின் காக்கிச் சட்டை படம் ரிலீசாகாது என்ற தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், டிசம்பர் இறுதி அல்லது அடுத்த ஆண்டுக்கு கூட படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இதுதான் சமயம்
இந்த விஷயம் குறித்த உறுதியான தகவலை தெரிந்து கொண்ட அந்த பிரைட் நடிகர், தனது அடுத்த ஆட்டத்தை ஃபுல் ஸ்பீடில் ஆட முடிவெடுத்துள்ளார். அந்த பெரிய பண்டிகை நாளை மாஸ் நடிகர் குறி வைப்பதற்கு முன்னதாக, தான் கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்ட, அந்த பிரைட் நடிகர் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு, தனது ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறார்.

அண்ணன்.. தம்பி
கடந்த ஆண்டு பெரிய பண்டிகை தினத்தன்று தம்பி படம் வெளியாகி பயங்கர ஹிட் ஆனது. இந்நிலையில், இந்த ஆண்டு பெரிய பண்டிகையை அண்ணன் நடிகர் குறிவைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வரும் அந்த நடிகரின் படம், இப்போதாவது திட்டமிட்ட படி வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.