’வி’ நடிகரை மதிக்காத அந்த பிரபலம்.. அதை அவாய்ட் பண்ணத் தான் அப்படியொரு டிராமாவா?

By Staff

சென்னை: தான் ஹீரோவாக நடித்த படத்தின் விழாவுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறி கலந்து கொண்ட அந்த நடிகர் மற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அந்த பிரம்மாண்ட படத்தின் நிகழ்ச்சியில் மட்டும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்வி கோலிவுட்டில் தீயாக கிளம்பி இருக்கிறது.

தனக்கு ஒன்றும் இல்லை எனக் கூறும் அவர் வேண்டுமென்றே இப்படியொரு டிராமாவை க்ரியேட் பண்ணதே அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க செய்த ஏற்பாடா என்றும் பெரும் விவாதமே வெடித்துள்ளது.

நடிகருக்கு உரிய மரியாதையை படத்தில் இருந்த குறிப்பிட்ட அந்தவொரு பிரபலம் கொடுக்காதது தான் இத்தனை பெரிய பஞ்சாயத்துக்கும் காரணம் என்கிற பேச்சுக்கள் கசிந்துள்ளன.

திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

வி நடிகர் அந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க போவதில்லை என்கிற நிலை ஏற்பட்ட பிறகு தான் அவருக்கு அப்படி பிரச்சனை, இப்படி பிரச்சனை என்கிற தகவலே வெளியே கசிந்தது. உண்மையில், கசியவிடப்பட்டது என்கிற பேச்சுவார்த்தைகள் தற்போது கோடம்பாக்கத்தில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. நடிகருக்கு என்ன ஆச்சோ ஏதோ ஆச்சோன்னு ஒட்டுமொத்த சினிமா உலகமும் பதறிய நிலையில், அது பற்றி எந்தவொரு அலட்டலும் இல்லாமல், விளக்கமும் இல்லாமல், அவர்கள் பாட்டுக்கு அந்த விழாவை நடத்தியதற்கு காரணமும் இதுதான் என்கின்றனர்.

எல்லாமே டிராமாவா

எல்லாமே டிராமாவா

நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என முடிவெடுத்த நிலையில், அந்த நடிகர் போட்ட டிராமா தான் இது என்றும், சேர்ந்த உடனே வெளியே கசியாத விஷயங்கள், அதற்கு மறுநாள் விழா துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பல்வேறு கோணத்தில் வெடித்துக் கிளம்ப காரணமே அதுதான் என்கின்றனர். நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பண்ணது தான் இதற்கு மொத்த காரணம் என்றும் கூறுகின்றனர்.

நடிகரின் பேச்சு

நடிகரின் பேச்சு

இந்த சந்தேகத்தை கோடம்பாக்கத்தில் உள்ள சினிமா வட்டாரத்தில் கிளப்பியதே தான் மட்டுமே சோலோ ஹீரோவாக நடித்துள்ள படத்தின் புரமோஷனுக்கு கலந்து கொண்டு நடிகர் அப்படி பேசிய பேச்சு தான் என்கின்றனர். ஒரு நடிகருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு, இவரை ஓரங்கட்டிய இயக்குநரின் செயல் தான் இத்தனை குழப்பங்களுக்கு காரணம் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.

ஈகோ கிளாஷ்

ஈகோ கிளாஷ்

இத்தனை பெரிய படத்தை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் வரை ஏகப்பட்ட உழைப்புகளும் சகிப்புத்தன்மையும் இருக்க வேண்டியது அவசியம். படத்தில் நடித்த பலருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்காத நிலையில், தான் அதை அவாய்டு பண்ண நடிகர் இப்படியொரு டிராமா போட்டு உள்ளார் என்றும் எல்லாத்துக்கும் காரணம் அந்த ஈகோ கிளாஷ் தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X