ஒல்லி நடிகருடன் அந்த டீலிங் போட காரணமே இதுதானா?.. ஃபேன் பாய் சம்பவத்திலும் திருப்தி இல்லையா?
சென்னை: டாப் நடிகர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படமும் பெரிய கிரவுடை தியேட்டருக்கு வரவழைக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். படத்தின் ரஷ்ஷை பார்த்ததுமே இத்தனை பில்டப் போட்டு நடிச்சதெல்லாம் வீணாகிவிடும் போல இருக்கே என டாப் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். அதன் பின்னர், தான் வேறு ரூட்டில் முழு கவனத்தையும் செலுத்தினார் எனக் கூறுகின்றனர்.
டாப் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்ந்து பஞ்சராகி வருகின்றன. அவரும் வித விதமான வித்தைகளை காட்டி படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்தாலும், அனைத்துமே ஓடாமல் பிரேக்டவுன் ஆகி நிற்பதை பார்த்து அவருக்கே கஷ்டமாகி விட்டதாம்.

ஒவ்வொரு தயாரிப்பாளர்களாக காலி செய்து வருகிறோமே என்கிற வருத்தமும் அந்த நடிகருக்கு அதிகளவில் கிளம்பிய நிலையில், எப்படியாவது ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்காவது ஒரு ஃபேன் பாய் சம்பவத்தை செய்து விடலாம் என்பதற்காக அந்த விசிறி இயக்குநரை அழைத்து வந்து உன் இஷ்டத்துக்கு ஒரு படம் பண்ணு என சொல்லிவிட்டாராம் நடிகர்.
திருப்தியில்லை: தொடர்ந்து படங்கள் சொதப்பி வர நடிகர் தான் காரணம் என்கின்றனர். அவர் சொல்லும் கதையை அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு ரிச் லுக்கில் நல்ல திரைக்கதை அமைத்து படமாக்கும் திறமை நம்ம ஊர் இயக்குநர்களுக்கு இல்லாதது தான் தனது படங்கள் ஃபிளாப் ஆக காரணம் என நினைத்து வரும் டாப் நடிகர் இந்த முறை ஃபேன் பாய் சம்பவத்தை செய்தாவது பாக்ஸ் ஆபீஸில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நினைத்தாராம். ஆனால், வம்பு நடிகருக்கு வச்சிருந்த கதையில் கொஞ்சம் மிச்ச மீதியை நடிகரின் பழைய படங்களிலேயே மிக்சர் மசாலா போல அந்த காப்பி இயக்குநர் செய்வதை போல கிண்டி கொடுக்க அதை பார்த்த நடிகருக்கு பெரிதாக திருப்தி ஏற்படவில்லையாம்.
ஒல்லி நடிகருடன் டீலிங்: டாப் நடிகருக்கென போட்டியாக ஒல்லி நடிகர் வந்துக் கொண்டிருந்த நிலையில், எதுக்குப்பா உனக்கு இவ்வளவு அவசரம் என கேட் போட்டு நடிகர் போட்ட டீலிங் தான் அந்த டிபன் படம் தாமதமாக காரணம் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர். நடிகர் போட்ட டீலிங் பிடித்ததும் ஒல்லி நடிகரும் மறுவார்த்தை சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டு ஓரம் கட்டி விட்டார் என்கின்றன்ர்.


Click it and Unblock the Notifications











