போயஸ் கார்டனில் வீசும் புயல்.. மேடையில் வெடித்த விரக்திப் பேச்சு.. உச்ச நடிகரின் வலி!
சென்னை: சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே அந்த 'போயஸ் கார்டன்' ஏரியா பிரமுகரின் குடும்ப விவகாரம் பேசு பொருளாகி கொண்டிருக்கிறது. சில வருடங்களிலேயே புதிய கட்சி தொடங்கி, ஒட்டுமொத்தத் தேர்தலையும் சந்தித்துத் சந்தித்தார் அந்த 'இளைய' மாஸ் நடிகர்.
இதைக் பார்க்கும் அந்த 'உச்ச' நடிகரின் ரசிகர்கள், நம் தலைவர் இருக்கும் இடத்தில் தான் இன்று அவர் இருக்கிறார், 2021-லேயே தலைவர் கோதாவில் இறங்கியிருந்தால் கண்டிப்பாக இந்நேரம் அவரும் அந்த நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் இப்போதும் ஆதங்கத்தோடு ரத்தக்கண்ணீர் வடித்து வருகிறார்கள். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த நடிகரும் தனது பழைய ஆதங்கத்தை ஓப்பனாக வெளிப்படுத்தி இருந்தார்.

மனைவியின் ஆசை: ரசிகர்களின் இந்த ஆதங்கம் ஒருபுறம் இருக்க, அந்த இளைய நடிகரின் அசுர அரசியல் வளர்ச்சி, அந்த உச்ச நடிகரின் மனைவியின் மனதிலும் மிகப்பெரிய ஆசையைத் தூண்டியுள்ளது. அன்றே என் கணவர் நினைத்திருந்தால் அந்த முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கலாம். நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமே" என்ற தீராத ஆதங்கத்தில் தான், அந்த நடிகரின் மனைவி அண்மையில் ஒரு 'புதிய மக்கள் இயக்கம்' ஒன்றை ஆரம்பித்து ஒட்டுமொத்த வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
பேச்சை மீறிய மனைவி: ஆனால், தன் மனைவியின் இந்த மறைமுக அரசியல் என்ட்ரி அந்த உச்ச நடிகருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. தன் பேச்சையும் மீறி மனைவி இப்படித் திடீரெனப் பொது வாழ்க்கையிலும், மறைமுக அரசியலிலும் இறங்க வேண்டாம் என அந்த உச்ச நட்சத்திரம் பலமுறை தடுத்துள்ளார். அவரின், தனது பேச்சை மீறி அந்தப் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாக வேலைகளில் இறங்கியது பயங்கர கோபத்தை ஏற்படுத்தியதாம். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மனஸ்தாபம் காரணமாக, மனைவியிடம் இருந்து கொஞ்ச நாள் தள்ளி இருக்க வேண்டும் என்று அதிரடி முடிவு எடுத்த அந்த டாப் நடிகர், வீட்டிற்குப் போகாமல் ஊர் ஊராகச் சுற்றி வருகிறாராம்.
விரக்திப் பேச்சு: இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் தான், அண்மையில் நடந்த பட விழாவில் அந்த உச்ச நடிகர் மிகவும் விரக்தியாக பேசினார். பிடிச்சவங்களுக்கு நாம எது செஞ்சாலும் பிடிக்கும்னு நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு தத்துவக் குண்டைப் போட்டிருந்தார். அவரின் தத்துவத்திற்குப் பின், தன் பேச்சை மதிக்காத மனைவி மீதான கோபம் தான் காரணம் என்று கோலிவுட் ஏரியாவில் ரகசியமாகப் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications