முன்னாள் காதலியை நினைத்து உருகும் நடிகர்... அதனாலதான் எல்லாத்துக்கும் அந்த நம்பர் யூஸ் பண்றாராம்!
சென்னை: விரல் நடிகர் இன்னும் முன்னாள் காதலியை நினைத்து உருகி வருகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அந்த விரல் நடிகர். பின்னர் பருவ வயதில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
தனக்கென ஒரு ஸ்டைலை வைத்துக் கொண்டு ஸ்டார் நடிகர் போல் விரலாலேயே வித்தை காட்டும் நடிகருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகையுடன் காதல்
விரல் நடிகர் ஆரம்ப காலம் முதலே காதல் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் காதல் கொண்டார் நடிகர். இருவரும் கணவன் மனைவி போல் நெருக்கமாக இருந்தனர். இதனால் கோலிவுட்டின் மொத்த பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது.

தொழில் ரீதியாக இணைந்தார்
ஆனால் அவர்களின் காதல் பாதியிலேயே முறிய நடிகர் தனது சுயரூபத்தை காட்டினார். இதனால் அந்த நடிகை, விரல் நடிகர் இருக்கும் பக்கமே திரும்பாமல் இருந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு தொழில் ரீதியாக நடிகருடன் இணைந்தார் நடிகை.

விரைவில் திருமணம்
நடிகர் அந்தரங்க போட்டோக்களை எல்லாம் வெளியிட்டதால் அவருடன் உறவே வேண்டாம் என்றிருந்த நடிகை, வேலையில் கவனம் செலுத்தினார். தற்போது நடிகை இயக்குநர் ஒருவருடன் டீப்பான காதலில் உள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளார் அந்த டாப் நடிகை.

பெண் பார்க்கும் படலம்
நடிகரும் அந்த நம்பர் நடிகையுடனான காதல் முறிவுக்கு பிறகு வேறு ஒரு பப்ளி நடிகையுடன் காதலில் விழுந்தார். ஆனால் நடிகையின் வீட்டில் எதிர்ப்பு எழவே அந்த காதலும் முறிந்தது. நடிகருக்கு பெண் பார்க்கும் படலமும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த நம்பருக்கு காரணம்
ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. இந்நிலையில் நடிகர் இன்னமும் நம்பர் நடிகையை நினைத்து உருகி வருகிறாராம். அதனால் தான் தனது படங்கள் சம்பந்தப்பட்ட புரமோஷன், அறிவிப்பு என எதுவாக இருந்தாலும் நடிகர் அந்த நம்பர் வருவதையே ஃபாலோ செய்து வருகிறாராம்.

இப்போ புலம்பி என்ன செய்ய?
அவசரப்பட்டு காதலியை இழந்துவிட்டதாகவும் தனது நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம் நடிகர். இதனை அறிந்த கோடம்பாக்கம், இருக்கும் போது மதிப்பு தெரியாமல் விட்டுவிட்டு இப்போது புலம்பி என்ன பிரயோஜனம் என்று முனுமுனுக்கிறார்களாம்..!


Click it and Unblock the Notifications











