பப்ளிசிட்டிக்கு பச்சைக்கொடி.. மாஸ் நடிகரின் ரூட்டை பின்பற்றும் டாப் நடிகர்.. வைரலாகும் போட்டோக்கள்!

சென்னை: பொதுவாக அந்த டாப் நடிகர், எந்தவொரு பப்ளிசிட்டியும் பண்ண மாட்டார் என்ற பேச்சு கோலிவுட்டில் இருக்கிறது.

தனது படம் குறித்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல், ரகசியம் காக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்த நடிகர், தனது புகைப்படங்களை ரசிகர்களின் வாயிலாக கசிய விட்டுள்ளாராம்.

வைரலான செல்ஃபி

வைரலான செல்ஃபி

சமீபத்தில், தனது ரசிகர்களின் அன்பிற்காக அந்த மாஸ் நடிகர், ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்ஃபி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார். ரசிகர்களுக்காக, அந்த நடிகர் எவ்வளவு செய்கிறார், நாமளும் செய்யணும் என அந்த டாப் நடிகருக்கு தோன்றியுள்ளதாம்.

பப்ளிசிட்டிக்கு பச்சைக்கொடி

பப்ளிசிட்டிக்கு பச்சைக்கொடி

ரசிகர்களுக்காக முன்பெல்லாம் அடிக்கடி தலை காட்டும் அந்த நடிகர், கொஞ்சம் காலமாகவே, பப்ளிசிட்டிகளை விரும்பாமல் இருந்தார். ஆனால், தங்கள் நடிகரின் புதிய படம் குறித்த அப்டேட் கூட வரவில்லை என தினமும் ரசிகர்கள் வருந்துவது, அந்த டாப் நடிகரின் காதுகளுக்கு எட்டியுள்ளன. இதனால், பப்ளிசிட்டிக்கு லேசாக பச்சைக் கொடி காட்டி உள்ளாராம்.

டிரெண்டான விபத்து

டிரெண்டான விபத்து

இதன் காரணமாகவே சில வாரங்களுக்கு முன்னதாக நடந்த சிறிய விபத்து நிகழ்ச்சியை, சில தினங்களுக்கு முன்பு பெரிய அளவில் செய்தியாக அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். ஆனால், அந்த டிரெண்டிங் பல ரசிகர்களின் மனங்களை பாதித்துள்ளதை அறிந்த அந்த டாப் நடிகர், தற்போது, அவர்களுக்கு, ஆறுதல் அளிக்குமாறு ஒரு மாஸான காரியத்தை செய்துள்ளார்.

வளைச்சு வளைச்சு போட்டோஷூட்

வளைச்சு வளைச்சு போட்டோஷூட்

டாப் நடிகருக்கு, என்ன ஆச்சு என்று தவித்து வந்த ரசிகர்களின், தவிப்பை போக்க, தனக்கு ஒன்றுமில்லை; தான் நலமாக உள்ளேன் என்பதை தெரிவிக்கும் விதமாக, சமீபத்தில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், வளைச்சு வளைச்சு அனைவருடனும் போட்டோ எடுத்து, அதனை டிரெண்ட் செய்யவும் அனுமதி கொடுத்துள்ளராம்.

அப்டேட் எப்போ?

அப்டேட் எப்போ?

தினமும் அந்த டாப் நடிகர் குறித்த தகவல்கள் இனிமேல் சமூக வலைதளத்தில் தாராளமாக வலம் வரும் என்பது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், அவர் நடிக்கும் படம் குறித்த அப்டேட்டுகள் எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சீக்கிரமே சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X