twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன நடந்தாலும் பரவாயில்லை.. ரசிகர்களுக்காக பண்ணலாம்.. க்ரீன் சிக்னல் கொடுத்த டாப் நடிகர்?

    By Staff
    |

    சென்னை: இப்போ படத்தை ரிலீஸ் செய்தாலும் நிச்சயம் வசூல் பெரிதளவில் பாதிக்கும் என தயாரிப்பு தரப்பு சொன்ன நிலையில், என்ன நடந்தாலும் பரவாயில்லை ரசிகர்களுக்காக படத்தை ரிலீஸ் பண்ணலாம் என டாப் நடிகர் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    கொடிய நோய் பரவல் காரணமாக மற்ற பெரிய படங்கள் எல்லாம் தியேட்டர் ரிலீஸை தள்ளி வைத்து வருகின்றன.

    வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே வெறும் 3 லட்சம் தானா...பெட்டி கொண்டு வந்தவர் சம்பளத்தை விட குறைவா இருக்கே

    ஆனால், ரசிகர்கள் நீண்ட காலம் காத்திருந்து விட்டனர் என்றும் இதை விட்டால் பின்னர் ரிலீஸ் செய்ய முடியாமல் போனாலும் போகும் என்பதற்காக இப்படியொரு முடிவை டாப் நடிகர் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    வருமா வராதா

    வருமா வராதா

    டாப் நடிகரின் புதிய படம் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் நிலையில், இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதே சமயம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை உருவாக்கி உள்ளது.

    வசூல் பாதிக்கும்

    வசூல் பாதிக்கும்

    ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் 50 சதவீதம் மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என ஏகப்பட்ட தடைகள் போடப்பட்டிருக்கும் சூழ்நிலையில், திரையரங்குகளில் படம் வெளியானால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக படம் வெளியாக வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

    நடிகர் க்ரீன் சிக்னல்

    நடிகர் க்ரீன் சிக்னல்

    என்ன ஆனாலும், பார்த்து விடலாம் ரசிகர்களுக்காக இந்த முறை ரிலீஸ் செய்யுங்க என தயாரிப்பு தரப்பிடம் டாப் நடிகர் ஒரே போடாக போட்டு சொன்ன நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து பின் வாங்கும் முடிவை தயாரிப்பு தரப்பு கை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த சப்போர்ட்

    அந்த சப்போர்ட்

    அதுமட்டுமின்றி கண்டிப்பாக திரையரங்குகள் முழுதாக முடக்கப்படாது என்கிற உத்தரவை ஆளுங்கட்சி தரப்பு உறுதியளித்துள்ள நிலையில், வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் தியேட்டரில் வெளியிட்டு பின்னர் ஒடிடியில் பெரிய தொகைக்கு விற்று விடலாம் என்கிற முனைப்புடன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இரு நிறுவனங்கள்

    இரு நிறுவனங்கள்

    ஏற்கனவே படத்தை வெளியிடும் அந்த பெரிய நிறுவனத்தின் ஒடிடியில் படம் வெளியாக உள்ள நிலையில், மேலும், இரு நிறுவனங்கள் தங்களின் ஒடிடிக்கு படத்தை வாங்கவும் பலத்த போட்டி நடத்தி வருகிறதாம். படம் தியேட்டரில் வெளியான சில வாரங்களிலேயே ஒடிடியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் படத்தின் வசூல் எந்தவகையிலும் பாதிக்காது என்கிற கணிப்பையும் தயாரிப்பு தரப்பு போட்டு டாப் நடிகரின் அட்வைஸையும் ஏற்று படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    போட்டி இல்லை

    போட்டி இல்லை

    மேலும், பெரிய போட்டிகள் இல்லாத நிலையில், படம் எப்படி ரிலீஸ் ஆனாலும் எதிர்பார்த்த வசூலை பெற்று விடும் என்றும் தள்ளிப் போய் ரிலீஸ் செய்தாலும், ஏகப்பட்ட படங்கள் போட்டிக்கு வந்து அப்போதும் வசூல் பாதிக்கும் நிலை உள்ளதால் இப்படியொரு ஸ்மார்ட் மூவை டாப் நடிகர் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Top actor gives green signal to release his movie in curfew period. Many movies announced their movies postponed due to pandemic but Top actor goes for his fans this time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X