Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
அந்த மூணும் புஷ் ஆகிடுச்சு.. அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த டாப் நடிகர்.. லேசா ஆரம்பித்த பயம்?
சென்னை: மாஸ் நடிகருடன் இந்த முறை போட்டி வைத்துக் கொள்ளலாம் என விநியோகஸ்தர்கள் சொல்ல தயாரிப்பாளரும் டாப் நடிகரும் தலையை ஆட்டி விட்டனர். ஆனால், கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க லேசாக பயம் தொற்றிக் கொண்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஏற்கனவே அந்த இயக்குநர் இயக்கத்தில் டாப் நடிகர் நடித்த இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியாக பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சாதனை படைக்கவில்லை.
சமீபத்தில் வெளியான படம் தொடர்பான அப்டேட்கள் அனைத்துமே ரெக்கார்டு எதையுமே செய்ய முடியாத நிலையில், அந்த விஷயத்துக்கு டாப் நடிகர் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
போட்டியால்
செம
கோபத்தில்
இருக்கிறாராம்
மாஸ்
நடிகர்..
அதனால்
தான்
அவரை
கண்டுக்கவே
இல்லையாம்!

சிக்கலான போட்டி
மாஸ் நடிகர் மற்றும் டாப் நடிகர் என இரு பெரும் நடிகர்களுக்கும் இந்த போட்டி ரொம்பவே ஒரு சிக்கலான போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் மன்னர்களான இருவரும் தனித்தனியாக படத்தை ரிலீஸ் செய்தால் அந்த படம் சுமாராக இருந்தாலும் இந்த ஆண்டு தியேட்டர்கள் வசூலை குவித்தது போல பெரிய வசூல் வேட்டை நடத்தலாம். ஆனால், இருவரும் மோதி பார்க்கும் முடிவுடன் வருவதை தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே பெரிதளவில் விரும்பவில்லையாம்.

மூணும் புஷ்
கடந்த முறையே பாடல்கள் சரியாக அமையவில்லை என்பதற்காக கடைசியில் இசையமைப்பாளரையே மாற்றிய அக்கப்போர் எல்லாம் நடந்த நிலையில், இந்த முறை அதை விட மோசமான நிலையில், சமீபத்தில் வெளியான அந்த 3 பாடல்களுமே புஷ் ஆகி விட்டன. இதனால் இசையமைப்பாளருக்கும் டாப் நடிகருக்கும் இடையே மீண்டும் முட்டிக் கொண்டதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

க்ரீன் சிக்னல்
இதுவரை ப்ரமோஷன் விஷயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், கடைசி நேரத்தில் படத்தை வாங்கிய அந்த பெரிய நிறுவனம் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்தால் தான் ஓவர்சீஸ் மார்க்கெட்டை பிடிக்க முடியும் என எடுத்துச் சொன்ன நிலையில், ஒரு வழியாக டாப் நடிகர் அதுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாராம். அதனால் தான் பிரம்மாண்ட ப்ரமோஷன்களில் கடைசி நேரத்தில் படக்குழு இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

விழா நடத்தவும் ஏற்பாடு
இதுமட்டுமின்றி நடிகர் கலந்து கொள்ளாமல் ஒரு விழா ஒன்றையும் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் ஹீரோயின் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற பயம் தான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறதா என ட்ரோல்களும் பறக்கின்றன.