அந்த பிரச்சனை.. இப்போ எப்படி அலற விட்டோம் பார்த்தீங்களா.. டாப் நடிகருக்கு வேட்டு வைத்த விஷமிகள்!

சென்னை: அப்டேட் தராத கோபத்தால், தயாரிப்பாளரை ஆபாசமாக திட்டித் தீர்த்த அந்த டாப் நடிகரின் ரசிகர்கள் தான் இப்படி ஒரு வேலையை செய்து, அந்த நடிகருக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதியாகாத நிலையில், படம் குறித்த அப்டேட் வேண்டும் என தொடர்ந்து ரசிகர்கள் தொல்லை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சில விஷமிகள் செய்த வேலை தான் தற்போது, அந்த டாப் நடிகர் பதற காரணமாம்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

கடந்த சில நாட்களாக அந்த டாப் நடிகர்களின் கோபம் உச்சத்திற்கே சென்று வருகிறது. சமீபத்தில், அந்த டாப் நடிகரின் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளரை மிகவும் ஆபாசமாக சித்தரித்து மீம்களை போட்டும், கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் அளவுக்கு மீறி அந்த நடிகரின் ரசிகர்கள் செய்த காரியம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியது.

மன உளைச்சல்

மன உளைச்சல்

ஏற்கனவே பெரும் சோகத்தில் இருக்கும் அந்த தயாரிப்பாளர், தற்போது, எந்த நடிகரை வைத்து கோடிக் கணக்கில் கொட்டி படம் எடுக்கிறோமோ, அந்த நடிகரின் ரசிகர்களே ஆதரவு தெரிவிக்காமல், இப்படி அசிங்கமாக திட்டி வருகின்றனரே என மன உளைச்சலுடன், இந்த விஷயத்தை அந்த டாப் நடிகர் காதுகளுக்கும் கேட்கும் படி செய்துள்ளார்.

விடுங்க பார்த்துக்கலாம்

விடுங்க பார்த்துக்கலாம்

ஆனால், தயாரிப்பாளர் பிரச்சனையை பெரிதாக அந்த டாப் நடிகர் கண்டு கொள்ளவில்லையாம். விடுங்க பார்த்துக்கலாம், நாம நம்ம வேலையை செய்வோம் என சொல்லி விட்டாராம். என்ன இவரு, தன்னுடைய ரசிகர்களை கண்டிச்சு வைக்க மாட்டேங்குறாரேன்னு அந்த தயாரிப்பாளருக்கு ரொம்ப கஷ்டமா போனதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றனர்.

பெரிய பிரச்சனை

பெரிய பிரச்சனை

என்னடா அந்த ஆளை அப்படி அசிங்கமா திட்டியும், இன்னும் அப்டேட் கொடுக்க மாட்டேங்குறாங்க, வேற என்னதான் பண்ணலாம் என விபரீதமாக யோசித்த சில விஷமிகள், அந்த டாப் நடிகரின் பெயரில் ஒரு வதந்தி ஸ்டேட்மென்ட்டை உருவாக்கி வைரலாக்கினர். இந்த விஷயம் அறிந்த அந்த டாப் நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டராம்.

டென்ஷனான நடிகர்

டென்ஷனான நடிகர்

இதை யார் செஞ்சாங்கன்னு விசாரிங்க, யாரா இருந்தாலும், அவ்ளோதான். என் பேரிலேயே விளையாடுறாங்களா? இதுக்கும் மேல அமைதியா இருக்க முடியாது என பொங்கிய அந்த டாப் நடிகர், சட்டப்படி என்ன செய்யணுமோ? செஞ்சுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளாராம். இதுக்கெல்லாம் சீக்கிரமே முடிவு கட்ட தயாரிப்பு தரப்பும் நல்ல நாள் பார்த்து வருவதாக கோலிவுட்டில் பேசிக்கிறாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X