எல்லாம் பொய்யாம் கோபால்.. இன்னமும் பகை தீரலையாம்.. காமெடி நடிகரை மாற்ற சொல்லி கோபப்பட்ட பிரபல நடிகர்

முன்னணி நடிகரின் படத்தில் காமெடி நடிகர் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லையாம்.

சென்னை: கோபம் குறைந்து முன்னணி நடிகரின் படத்தில் மீண்டும் அந்த காமெடி நடிகர் நடிக்க இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இது பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. அப்போது அந்த நடிகரை விட காமெடி நடிகர் தான் மிகவும் பிரபலம். இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது முட்டிக் கொண்டது. வார்த்தைகள் தடிக்க, அதோடு அந்த நடிகரின் படத்தில் நடிப்பதில்லை என காமெடி முடிவு செய்து விட்டார்.

காலச்சக்கரம் உருண்டு ஓடியதில் தற்போது அந்த நடிகர் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆனால் பாவம் காமெடி நடிகர் தான் பல பிரச்சினைகளில் சிக்கி படவாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பகை மறைந்தது

பகை மறைந்தது

இந்தச் சூழ்நிலையில் நடிகரின் புதிய படத்தில் காமெடியும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. பகையை மறந்து இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அந்தத் தகவல் உண்மையில்லை என இப்போது தெரிய வந்துள்ளது.

தீராத கோபம்

தீராத கோபம்

முன்பு தன்னை நிராகரித்த நடிகரை தற்போது மீண்டும் தன் படத்தில் நடிக்க வைக்க அந்த நடிகருக்கு மனமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காமெடியை மாற்றச் சொல்லி விட்டதாக சிலர் கூறுகிறார்கள்.

எல்லாம் வதந்தி

எல்லாம் வதந்தி

ஆனால் மற்றொரு தரப்போ படக்குழு அவரை அணுகவே இல்லை. அந்த நடிகரின் படத்தில் காமெடி நடிப்பதாக வெளியான தகவலே வதந்தி தான். ஒப்பந்தம் செய்தால் தானே வேண்டாம் எனச் சொல்வதற்கு என்கிறார்கள்.

எது உண்மை

எது உண்மை

அதனால் தான் சமீபத்திய விழா ஒன்றில் வெறொரு படத்தில் நடிப்பதை மட்டும் காமெடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்றும் கோலிவுட்டில் கூறுகிறார்கள். இதில் எது உண்மையோ அது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தான் வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X