எல்லாத்துக்கும் காரணம் டாப் நடிகர் தான்.. ஒவ்வொரு படத்தையும் அவர் தான் கெடுக்கிறாரு.. பிரபலம் பகீர்!
சென்னை: மாஸ் நடிகருக்கு ஒரு பழைய இங்கிலீஷ் படம் பெரிய ஹிட் கொடுத்த நிலையில், தனக்கு ஏற்ற அப்படியொரு கதையை கொடுத்து இயக்குநரை படம் பண்ண சொன்னதே அந்த டாப் நடிகர் தான் எனக் கூறுகின்றனர். தற்போது படம் வெளியாக முடியாமல் திணற காரணமும் நடிகர் பார்த்த வேலை தான் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அதன் காரணமாகத்தான் நடிகரின் ரசிகர்களே கொந்தளித்து சோஷியல் மீடியாவில் நீங்க நடிக்கவே வேண்டாம் எனக் கூறி வருவதாகவும் அடுத்த படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி தான் என பூகம்பம் வெடித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் இதே வேலையைத்தான் அந்த டாப் நடிகர் செய்து இயக்குநர்களை காலி செய்து வருகிறார் என்றும் அவரை நம்பி பணம் போட்டு தயாரிக்கும் நிறுவனங்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் என்கின்றனர்.
கதையில் தலையீடு: நடிகரை வைத்து படம் பண்ணலாம் என்கிற முடிவுடன் இயக்குநர்கள் யாராவது அவரை அப்ரோச் செய்தால், அவர்களது கதையை முழுமையாக கேட்டுவிட்டு, என்னிடம் ஒரு கதை இருக்கு இப்போ அதை பண்றீங்களா என நடிகர் சொல்லியதும், அவரை வைத்து இயக்கினாலே ஹிட் கொடுத்துவிடலாம் என்கிற நினைப்பிலும், எதிர்த்து பேசினால் அவரை இயக்கும் வாய்ப்பே போய் விடுமே என்கிற அச்சத்திலும் நடிகர் சொல்லும் கதையையே படமாக்க இயக்குநர்கள் ஆமாம் சாமி போட்டு வருவது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் நடிகருக்கு எதிராக இயக்குநர்களின் புலம்பல் குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
திருட்டுக் கதை: உரிய அனுமதி பெற்று படத்தை எடுத்தால் பல கோடி தண்டம் கொடுக்க வேண்டும் என நினைத்து வழக்கமாக பல இயக்குநர்கள் எப்படி சுட்டு படம் பண்ணுகிறார்களோ அதே ரூட்டில் போய் விடலாமே என்கிற நினைப்பில் தயாரிப்பு நிறுவனம் இறங்கிய நிலையில், இயக்குநர் எந்தவொரு மாறுதலும் செய்யாமல் ஈயடிச்சாங் காப்பி அடித்து வைத்த நிலையில் தான் விஷயம் ஒரிஜினல் ஓனர் காதுகளுக்கே சென்று விட்டதாக கூறுகின்றனர்.
இயக்குநருக்கு திட்டு: மற்ற இயக்குநர்கள் எல்லாம் அந்த படம் என்று கோர்ட்டில் வழக்குப் போட்டால் கூட நிற்காத அளவுக்கு காப்பியடித்து பண்ணி வரும் சூழலில் இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாமல் கோர்த்துவிடுவீங்க என தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநர் தரப்புக்கும் சண்டை வெடித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என நடிகர் அப்படியே ஒதுங்கிக் கொண்டாராம்.


Click it and Unblock the Notifications











