Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்த்த அளவுக்கு அந்த இசையமைப்பாளரிடம் சரக்கு இல்லையா? ஒரேயடியாக ஓரங்கட்டிய பவர் இயக்குநர்!
சென்னை: டாப் நடிகரின் பவர் படத்தை இயக்கிய அந்த திறமையான இயக்குநர் தொடர்ந்து இரு படங்களுக்கும் அதே இசையமைப்பாளரை பயன்படுத்தி வந்த நிலையில், இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு இசை இல்லை எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது படத்திலேயே சில இடங்களில் வேறு ஒரு இசையமைப்பாளரை துணைக்கு கொண்டு தான் மியூசிக்கையே முடித்தி இருக்கிறாராம் பவர் இயக்குநர்.
இந்த
வாரமும்
டபுள்
எவிக்ஷனா...
வெளியேறுவதிலும்
கடுமையாக
போட்டி
போடும்
அந்த
3
பேர்
அதுமட்டுமின்றி இனிமேல் அவருடன் இணைந்து பணியாற்ற போவது இல்லை என்கிற முடிவுக்கும் வந்த் விட்டதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

பெரிய இடத்துப் பிள்ளை
நடிகர்கள் மட்டுமின்றி வாரிசு இயக்குநர்கள், வாரிசு இசையமைப்பாளர்கள் என ஏகப்பட்ட வாரிசு அரசியல் திரைத் துறையில் காலம் காலமாக இருந்து வருகிறது. அதிக பணம் மற்றும் செல்வாக்கு இருப்பதால் பள்ளிகளுக்கு முறையாக செல்லாமல் மட்டம் போட்டு விட்டு கடைசியில் சினிமாவில் தான் ஆசை என பெற்றோரின் நிழலிலேயே இன்னொரு காப்பியாக மாறி விடுகின்றனர்.

ஹிட்டும் ஃபிளாப்பும்
இசை துறையில் ஆர்வம் கொண்ட அந்த வாரிசு இசையமைப்பாளர் ஹிட் மற்றும் ஃபிளாப் என தனது கரியரில் ஏகப்பட்ட அப்ஸ் மற்றும் டவுன்களை சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு இசை துறையில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் நடைபெற்று வந்தாலும் பழைய அளவுக்கு அவரது இசை ஃபிரஷ் ஆக இல்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

தொடர்ந்து சொதப்பல்
பின்னணி இசை நன்றாக இருந்தால் பாடல் சரியாக இல்லை என்றும் பாடல் சிறப்பாக இருந்தால் பின்னணி இசையில் சொதப்பி விடுகிறார் என்றும் பவர் இயக்குநருக்கு அந்த இசையமைப்பாளர் மீது மிகப்பெரிய வருத்தம் ஏற்பட்டுள்ளது. இத்தனை பெரிய படம், அட்டகாசமான விஷுவலுக்கு ஏற்ற விதத்தில் இசையில் புதுமையாக மிரட்டி இருந்திருக்கலாம் ஆனால், அவர் அதனை செய்யவில்லை என்பதால் சில இடங்களில் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.

வேறு நபர்களை வைத்து
நேரடியாக அந்த இசையமைப்பாளரே இசை பணிகளை முடித்துக் கொடுக்காமல் உறவினர்களிடம் அந்த வேலைகளை பிரித்துக் கொடுப்பதில் தான் சிக்கலே ஆரம்பித்ததாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர். அதன் காரணமாக பல காலமாக சேமித்து வைத்திருந்த பெயரையும் அவர் கெடுத்துக் கொண்டு வருகிறாராம்.

அடுத்த படத்துக்கு வேறொருவர்
டாப் நடிகரின் ரசிகர்கள் கடைசியாக தியேட்டரையே தெறிக்கவிட்டு ஆடியது அந்த ஒல்லி இசையமைப்பாளரின் இசையில் தான் என்பதால், மூன்றாவது முறையாக டாப் நடிகருடன் இணையும் படத்தில் அவரையே புக் செய்ய இயக்குநர் தீர்மானித்து விட்டாராம். கதையே இல்லை என்றாலும் பாடல்களால் பயங்கர ஹிட் கொடுக்கும் திறமை மிக்க அந்த ஒல்லி இசையமைப்பாளரை நம்பி கடந்த இரு படங்களில் பணியாற்றி வந்த வாரிசு இசையமைப்பாளரை பவர் இயக்குநர் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.